மீண்டும் இதே பிரச்சினையா??.. 2வது டி20 போட்டியின் நேரம் மீண்டும் மாற்றம்.. அப்படி என்னதான் பிரச்சினை
செயிண்ட் கிட்ஸ்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு செயிண்ட் கிட்ஸில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் இந்தியா முதல் போட்டியில் வெற்றி பெற்றதால், 2வது போட்டியிலும் வெற்றி பெற முனைப்புடன் உள்ளது.

2வது டி20
ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் முதல் டி20 போட்டி ட்ரினிட்டாட்டில் நடைபெற்றது. ஆனால் 2வது மற்றும் 3வது டி20 போட்டிகள் செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக இரு அணி வீரர்களும் நேற்றே அங்கு சென்றடைந்தனர். போட்டி இன்று இரவு 8 மணிக்கு வழக்கம் போல் தொடங்கும் என அறிவித்தனர்.

திடீர் மாற்றம்
ஆனால் இன்று மாலை திடீரென போட்டியின் நேரம் மாற்றப்பட்டது. 8 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி இரவு 10 மணிக்கு தான் தொடங்கும் என கூறியதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். ட்ரினிட்டாட்டில் இருந்து செயிண்ட் கிட்ஸுக்கு வீரர்களின் உடமைகள் வந்து சேராதது தான் காரணம் எனக்கூறப்பட்டது.

மீண்டும் ஒத்திவைப்பு
இந்நிலையில் இரவு 10 மணிக்கு போட்டியை காண காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒத்திவைப்பு செய்தி வந்துள்ளது. அதாவது 2வது டி20 போட்டி மீண்டும் 10 மணியில் இருந்து 11 மணிக்கு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் கடும் கோபமடைந்துள்ளனர். ஒரு போட்டியை சரியாக நடத்தும் அளவிற்கு கூட வசதிகள் இல்லையா? என விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
Recommended Video

புது பிரச்சினை
வீரர்கள் உடமைகள் இரவு 8 மணிக்குள் வார்னர் பார்க் மைதானத்திற்கு வந்து சேர்ந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 மணிக்கு மேல் தான் வந்து சேர்ந்தது. இதனால் வீரர்கள் தயாராக வேண்டியுள்ளதால் 11 மணிக்கு போட்டி நடைபெறும் எனத்தெரிகிறது. இதனால் இந்திய ரசிகர்கள் தான் கோபமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications