Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது ஒருநாள் போட்டி நடப்பதில் சிக்கல்.. சாதனையை தவறவிடும் இந்தியா?.. என்ன காரணம்?

ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.

இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியா 2 வெற்றிகளுடன் தொடரை கைப்பற்றிவிட்ட, சூழலில் கடைசி போட்டி இன்று இரவு 7 மணிக்கு குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தியாவின் சாதனை

இந்தியாவின் சாதனை

முதல் 2 போட்டிகளிலும் த்ரில் வெற்றி பெற்ற இந்தியா, இதிலும் வெற்றி பெற்றுவிட்டால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியை, அதன் மண்ணிலேயே வைட் வாஷ் செய்யும் பெருமை கிடைக்கும். கடந்த 39 ஆண்டுகாலமாக மோதி வந்த போதும், ஒருமுறை கூட இது நடக்கவில்லை. எனவே புதிய சாதனை படைக்க வேண்டும் என இந்திய வீரர்கள் முனைப்புடன் உள்ளனர்.

புதிய சிக்கல்

புதிய சிக்கல்

இந்நிலையில் இன்றைய முழுவதுமாக நடக்குமா என்பதிலேயே சந்தேகம் எழுந்துள்ளது. போட்டி நடைபெறும் போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரத்தில் இன்று காலை முதலே கன மழை பெய்து வருகிறது. சிறிது நேரம் கூட மழை நிற்காததால் இந்திய அணியின் வலைப்பயிற்சிகளும் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழைக்கான வாய்ப்பு

மழைக்கான வாய்ப்பு

தற்போது வரை அங்கு வானிலை மிகவும் மோசமாக இருப்பதால் 70% சதவீதம் வரை மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒருவேளை மழைப்பொழிவு இல்லாமல் போனாலும், வெளிச்சமின்மை மற்றும் அதிக காற்று ஆகிய சவால்கள் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

குயின்ஸ் பார்க் மைதானத்தில் கடந்த 2 போட்டிகளிலுமே அதிக ஸ்கோரிங் கொண்டதாக தான் இருந்தது. இன்று அதிக காற்று, மழை இருக்கும் என்பதால், வேகப்பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். எனவே இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணியில் பேட்ஸ்மேன்கள் திணறலாம். டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்தால் தான் வெற்றி என்ற சூழல் இருக்கும்.

Story first published: Wednesday, July 27, 2022, 15:54 [IST]
Other articles published on Jul 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+