இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் – 3வது டி20 பிளேயிங் லெவனில் 4 மாற்றம்.. ருத்துராஜ், அவேஷ்க்கு வாய்ப்பு
கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று தொடங்கியது.
ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.
இதனால் முதல் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியும், தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணியும் உள்ளது.

இஷான் கிஷன்
தொடரை வென்றதால் இந்திய அணி கடைசி போட்டியில் இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் இந்திய அணியிலிருந்து வெளியேறிவிட்டனர். இதனால் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் செயல்பட உள்ளார்.

ருத்துராஜ்க்கு வாய்ப்பு
இந்தப் போட்டியில் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொடக்க ஜோடியாக ருத்துராஜ் மற்றும் இஷான் கிஷனுக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளதாக ரோகித் சர்மா தெரிவித்துள்ளது. இதனால் ரோகித் சர்மா நடுவரிசையில் விளையாட உள்ளார்.

நடுவரிசை
நடுவரிசையில் விராட் கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரும் இன்றைய போட்டியில் களம் காண்கிறார். இதே போன்று சாஹலுக்கு ஓய்வு வழங்கப்பட்டு ஷர்துல் தாக்கூரும், புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அவேஷ் கானும் இன்றைய போட்டியில் விளையாடுகின்றனர்.

பிளேயிங் லெவன்
1,இஷான் கிஷன் 2, ருத்துராஜ் கெய்க்வாட், 3,ரோகித் சர்மா 4, சூரியகுமார் யாதவ், 5, ஸ்ரேயாஸ் ஐயர், , 6, வெங்கடேஷ் ஐயர், 7, ஷர்துல் தாக்கூர், 8, தீபக் சாஹர், , 9, ஹர்சல் பட்டேல், 10, அவேஷ் கான் 11, ரவி பிஸ்னாய்


Click it and Unblock the Notifications