Breaking - இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் - 3வது டி20 போட்டியின் நேரம் மாற்றம்.. காரணம் என்ன ?
செயிண்ட் கிட்ஸ்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டிக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியாவுக்கும் இடையே நேரம் வித்தியாசம் மிகவும் அதிகம். இதனால், வெஸ்ட் இண்டீஸ் போட்டியை நேரடி ஒளிபரப்பு செய்ய முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் மறுத்துவிட்டது.
காரணம், வெஸ்ட் இண்டீசில் போட்டி நடந்தால் இந்தியாவில் அது இரவாகிவிடும். டி20 போட்டி அதிகாலையில் தான நடைபெறும்.

3 மணி நேரம் தாமதம்
இதனை கருத்தில் கொண்டு இந்திய ரசிகர்களுக்காக டி20 மேற்றும் ஒருநாள் போட்டியை காலை 9 மற்றும் 10 மணிக்கே உள்ளூரில் தொடங்கும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டது. இதனால் இந்திய ரசிகர்கள் இரவு 8 மணிக்கு டி20 போட்டியை பார்த்துவிட்டு படுத்து உறங்க முடியும். ஆனால் நேற்று எதிர்பாராத விதமாக போட்டி 3 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

மீண்டும் மாற்றம்
அதற்கு காரணம் சொல்லப்பட்டது தான் இந்திய ரசிகர்களை வெறுப்படைய செய்தது. இரு அணிகளின் உபகரணங்களும் மைதானத்துக்கு கொண்டு வர தாமதமாகிவிட்டதால் போட்டியின் நேரம் மாற்றப்பட்டது. இந்த நிலையில், இன்று நடைபெறும் 3வது டி20 போட்டியின் நேரமும் மாற்றப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

90 நிமிடங்கள்
நேற்று போட்டி முடிய தாமதமாகிவிட்டது. இதனால், எவ்வித இடைவெளியும் இன்றி மீண்டும் போட்டி தொடங்க உள்ளது. வீரர்களுக்கு போதிய ஓய்வு கிடைத்திருக்காது என்பதால், இன்றும் போட்டி ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கப்படும் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

காரணம் என்ன?
இதனால் செயிண்ட் கிட்ஸ் நகரில் நடைபெறும் 3வது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குவதற்கு பதிலாக 9.30 மணிக்கு தொடங்கும். இதனால் தொடர்ந்து 2வது நாளாக போட்டி தாமதமாக தொடங்குவது இந்திய ரசிகர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது. இதனால் இன்றைய போட்டியும் முடிய 1.30 மணி ஆகலாம்.


Click it and Unblock the Notifications