Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் – 3வது டி20 பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்.. ருத்துராஜ்க்கு வாய்ப்பு?

கொல்கத்தா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நாளை ஞாயிற்றுகிழமை தொடங்குகிறது.

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.

இதனால் முதல் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணியும், தொடரை முழுமையாக கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணியும் உள்ளது.

இஷான் கிஷன்

இஷான் கிஷன்

தொடரை வென்றதால் இந்திய அணி கடைசி போட்டியில் இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு வழங்கும். அதற்கு ஏதுவாக கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் இந்திய அணியிலிருந்து வெளியேறிவிட்டனர். இதனால் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் செயல்படுவார் என தெரிகிறது.

ருத்துராஜ்க்கு வாய்ப்பு

ருத்துராஜ்க்கு வாய்ப்பு

எனினும் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்குவாரா இல்லை நடுவரிசையில் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கிஷன் நடுவரிசையில் விளையாடினால் ஓபனிங்கில் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வாய்ப்பை எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என தெரிகிறது.

நடுவரிசை

நடுவரிசை

ஒரு வேலை இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கினால் நடுவரிசையில் விராட் கோலிக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரும், ரிஷப் பண்ட்டுக்கு பதிலாக தீபக் ஹூடா அல்லது ஷாரூக்கானுக்கும் வாய்ப்பு வழங்கலாம் என தெரிகிறது. இதே போன்று சாஹலுக்கு ஓய்வு வழங்கப்பட்டு, குல்தீப் யாதவ்க்கு அணியில் இடம் கிடைக்கலாம்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இதே போன்று வேகப்பந்துவீச்சிலும், முகமது சிராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. உத்தேச அணி, 1, ரோகித் சர்மா, 2,இஷான் கிஷன்/ருத்துராஜ் கெய்க்வாட், 3, சூரியகுமார் யாதவ், 4, ஸ்ரேயாஸ் ஐயர், 5, தீபக் ஹூடா, 6, ஷாரூக்கான், 7, தீபக் சாஹர், 8, முகமது சிராஜ், 9, புவனேஸ்வர் குமார், 10, குல்தீப் யாதவ், 11, ரவி பிஸ்னாய்

Story first published: Saturday, February 19, 2022, 20:26 [IST]
Other articles published on Feb 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+