For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்னும் ஒரே ஒரு போட்டி தான்.. டி20ல் புதிய உச்சத்தை தொடும் சூர்யகுமார் யாதவ்.. எப்படி தெரியுமா?

ஃப்ளோரிடா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது டி20 போட்டியில் பிரமாண்ட சாதனையை படைக்க சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் சூழலில் தொடரை கைப்பற்றும் வாய்ப்புள்ள 4வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் 4வது டி20 - பிளேயிங் லெவனில் 3 மாற்றம்.. ரோகித் சர்மா எடுத்த முடிவுஇந்தியா Vs வெஸ்ட் இண்டீஸ் 4வது டி20 - பிளேயிங் லெவனில் 3 மாற்றம்.. ரோகித் சர்மா எடுத்த முடிவு

 ஐசிசி தரவரிசை

ஐசிசி தரவரிசை

ஃபார்ம் அவுட்டில் இருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், கடந்த 4வது போட்டியின் போது அட்டகாசமான கம்பேக் கொடுத்தார். 44 பந்துகளை சந்தித்த அவர் 76 ரன்களை குவித்தார். மேலும் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசைப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தினார். இந்நிலையில் தற்போது மற்றொரு உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளது.

புது உச்சம்

புது உச்சம்

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தான் கடந்த ஓராண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறார். ஆனால் இன்று அந்த இடத்தை சூர்யகுமார் யாதவ் பிடிக்கலாம். பாபர் அசாம் தற்போது வரை 818 புள்ளிகளுடன் இருக்கிறார். அவர் அடுத்ததாக ஆசியக்கோப்பை தொடரில் தான் டி20 கிரிக்கெட் விளையாடவுள்ளார். எனவே வெறும் 2 புள்ளிகள் மட்டுமே பின்தங்கி உள்ள சூர்யகுமார் இன்று பாபரை முந்துவார்.

எவ்வளவு ரன் தேவை

எவ்வளவு ரன் தேவை

இதற்காக இன்றைய போட்டியில் அரைசதம் அடிக்க கூட தேவை இல்லை. 30 பந்துகளில் 40 ரன்களை அடித்துக் கொடுத்தாலே போதும், பாபர் அசாம் முதலிடத்திற்கு முன்னேறுவார். ஒருவேளை இன்றைய போட்டியில் அவர் சொதப்பினாலும், நாளை நடைபெறவுள்ள 5வது டி20 போட்டியில் வாய்ப்புள்ளது.

டி20 ரெக்கார்ட்

டி20 ரெக்கார்ட்

இதுவரை 20 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 648 ரன்களை குவித்துள்ளார். இதில் 5 அரைசதங்கள் மற்றும் ஒரு சதமும் அடங்கும், அவரின் சராசரி 38.12 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 175.61 ஆகும். காயத்திற்கு பிறகு தற்போது நல்ல கம்பேக் கொடுத்துள்ளதால் ஆசியக்கோப்பை தொடரில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Saturday, August 6, 2022, 17:08 [IST]
Other articles published on Aug 6, 2022
English summary
Suryakumar yadav milestone ( இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் 4வது டி20 போட்டி ) வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 4வது டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் புதிய உச்சத்தை தொடவுள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X