For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs WI 5th T20- தொடரை வெல்லுமா இந்தியா..தோனியை காப்பி அடித்த ஹர்திக்.. கில் ரன் குவிப்பு தொடருமா?

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளது.

இதனால் கடைசி டி20 போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் தொடரை வெல்ல முடியும். இந்திய அணி பூஜ்ஜியத்துக்கு இரண்டு என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் அடுத்தடுத்து இரண்டு டி20 போட்டிகளை வென்று தற்போது சமன் செய்து இருக்கிறது.

India vs west indies 5th t20 - Hardik pandya won the toss and decided to bat

இதன் மூலம் கடைசி டி20 போட்டியை வென்றால் முதல் இரண்டு போட்டிகளை தோற்று கடைசி மூன்று போட்டிகளை வென்ற முதல் அணி என்ற பெருமையை இந்தியா படைக்கும். நேற்றைய போட்டியில் பயன்படுத்த அதே ஆடுகளம் தான் இன்றைய போட்டியிலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆடுகளும் போகப் போக தொய வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வென்றதால் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்தது
நல்ல முடிவாக கருதப்படுகிறது.

கடந்த டி20 போட்டியில் அபாரமாக விளையாடிய கில்லும் ஜெய்ஸ்வாலும், அதே உத்வேகத்தை இன்றைய ஆட்டத்திலும் தொடர்வர்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதால் மிகப்பெரிய ரன்களை குவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஏனென்றால் இந்தியாவின் பந்துவீச்சு அனுபவம் வாய்ந்தது கிடையாது. இது குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம்.

எங்களுக்கு நாங்கள் சவாலை நிர்ணயித்துக் கொள்ள ஆசைப்படுகிறோம்.இது நல்ல ஆடுகளம். நாங்கள் கடந்த ஆண்டு இங்கு விளையாடிய போது இருந்ததைவிட தற்போது நல்ல முன்னேறி இருக்கிறது. இதுபோன்ற ஆடுகளத்தில் விளையாடும் போது நீங்கள் கொஞ்சம் தைரியமாக இருக்க வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு பெரிய இதயம் இருக்க வேண்டும்.

நீங்கள் முதல் மூன்று பந்துகளில் ரன் கொடுத்தாலும் பரவாயில்லை கடைசி இரண்டு பந்துகளில் ரன்களை கட்டுப்படுத்துங்கள். அது ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஹர்திக் பாண்டியா கூறினார். ஹர்திக் பாண்டியாவின் இந்த பேச்சு அப்படியே தோனி கூறியதாகும். அப்படியே சுட்டு ஹர்திக் பாண்டியா தற்போது கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் போவெல்,இந்திய வீரர்களுக்கு வித்தியாசமான திட்டத்தை வகுத்து இருப்பதாக கூறியுள்ளார்.

Story first published: Sunday, August 13, 2023, 19:56 [IST]
Other articles published on Aug 13, 2023
English summary
India vs west indies 5th t20 - Hardik pandya won the toss and decided to bat IND vs WI 5th T20- தொடரை வெல்லுமா இந்தியா..தோனியை காப்பி அடித்த ஹர்திக்.. கில் ரன் குவிப்பு தொடருமா?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+