Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதி!!..தடைபடும் முதல் ஒருநாள் போட்டி.. யார் அந்த வீரர்கள்- முழு விவரம்

அகமதாபாத்: இந்திய அணியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

Recommended Video

India வீரர்களுக்கு கொரோனா பரவ BCCI காரணம்? விளாசும் ரசிகர்கள் | Oneindia Tamil

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

முதல் ஒருநாள் போட்டி வரும் பிப்ரவரி 6ம் தேதியன்று அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறவிருந்தது.

 கொரோனா தொற்று உறுதி

கொரோனா தொற்று உறுதி

இதற்காக இந்திய வீரர்கள் அனைவரும் நேற்று விமானம் மூலம் அகமதாபாத்திற்கு வரவழைக்கப்பட்டு பயோ பபுளுக்குள் சேர்க்கப்பட்டனர். குவாரண்டைனின் போது ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படும். அதன்படி இன்று எடுக்கப்பட்ட பரிசோதனையில் மொத்தம் 3 வீரர்கள் உட்பட மொத்தம் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

இந்திய அணியின் முதன்மை தேர்வான ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோருக்கு தான் கொரோனா உறுதியாகியுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் அதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

குவாரண்டைன்

குவாரண்டைன்

இவர்கள் அனைவருக்கும் முதல் சுற்று பரிசோதனையில் கொரோனா உறுதியான நிலையில் மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் முழு பரிசோதனைகளை செய்துவிட பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து அந்த 3 வீரர்களுடன் சேர்த்து மற்ற அனைத்து வீரர்களும் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர்.

போட்டி ஒத்திவைப்பா?

போட்டி ஒத்திவைப்பா?

2ம் கட்ட பரிசோதனையில் மேலும் சில வீரர்களுக்கு கொரோனா உறுதியாகும் என அஞ்சப்படுவதால், இன்னும் 3 நாட்களில் நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டி ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

Story first published: Thursday, February 3, 2022, 0:49 [IST]
Other articles published on Feb 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+