
இந்திய அணி
இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்திருந்தது. ரோகித் சர்மா தலைமையில் 18 பேர் கொண்ட படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முறை அஸ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி என சீனியர் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அதிகப்படியான இளம் வீரர்களுடன் இந்திய அணி களம் காணுகிறது.

வீரர்களுக்கு சுற்றறிக்கை
இந்நிலையில் அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கு பிசிசிஐ திடீர் சுற்றறிக்கை விட்டுள்ளது. அதாவது சொந்த ஊர்களில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் அனைத்து ஊழியர்கள் மற்றும் வீரர்களும் வரும் பிப்ரவரி 1ம் தேதிக்குள் அகமதாபாத்தில் ஆஜராக வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவாரத்திற்கு முன்பிருந்தே அங்கு அவர்கள் குவாரண்டை இருக்கவுள்ளனர்.

தனி விமானம் இல்லை
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒவ்வொரு வீரர்களையும் அழைத்து வர சென்னை, பெங்களூரு நகரங்களுக்கு தனி விமானம் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த முறை அதெல்லாம் தர முடியாது எனவும் பயணிகள் விமானத்தில் நீங்களே வந்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துவிட்டது. இதனால் கொரோனா பரவி விடுமோ என்ற அச்சத்தில் வீரர்கள் உள்ளனர்.
Recommended Video

கொரோனா பரிசோதனை
அகமதாபாத் சென்றடைந்தவுடன் அனைத்து வீரர்களும் 3 நாட்களுக்கு குவாரண்டைன் செய்யப்பட்டு தினமும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதில் நெகட்டீவ் என வருபவர்கள் மட்டும் 4ம் தேதி முதல் பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். நவம்பர் 6ம் தேதி இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது.


Click it and Unblock the Notifications