For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிஷப் பண்ட்-ன் இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டை.. திடீரென நேரலையில் வந்த தோனி.. என்ன பேசினார் தெரியுமா??

ட்ரினிடாட்: இன்ஸ்டாகிராம் லைவ் காலில் திடீரென தோனி வந்ததது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணி ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி கண்டு தொடரை கைப்பற்றிவிட்ட நிலையில் 3வது போட்டி இன்று தொடங்குகிறது.

3வது போட்டி

3வது போட்டி

இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு குயின்ஸ் பார்க் மைதானத்தில் தொடங்கவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி ஒரு முறை கூட வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் மண்ணில் வைட் வாஷ் செய்தது கிடையாது. 39 ஆண்டுகளில் முதல் முறையாக அந்த சாதனையை படைக்க இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இன்ஸ்டா சேட்டை

இன்ஸ்டா சேட்டை

இந்நிலையில் இந்த பரபரப்புக்கு இடையே இந்திய அணி வீரர்கள் இன்ஸ்டாகிராமில் சேட்டை செய்துள்ளனர். ரசிகர்களுக்காக லைவ் காலில் வந்த ரிஷப் பண்ட், அதில் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரையும் சேர்த்தார். இதன்பின்னர் வேறு யாரை சேர்க்கலாம் என ரசிகர்கள் பல பெயர்களை தெரிவித்த போது, திடீரென தோனிக்கு அழைத்து ஆச்சரியம் ஏற்படுத்தினார்.

 தோனி பேசியது என்ன

தோனி பேசியது என்ன

முதலில் அதனை சாக்‌ஷி தோனி எடுத்து ரசிகர்களுக்கு வணக்கம் கூறிய நிலையில், அடுத்ததாக தோனியின் முகத்தை காண்பித்தார். நீண்ட நாட்களுக்கு பின்பு அவரை சமூகவலைதளத்தில் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ரோகித்திடம் பேசிய ரிஷப் பண்ட் " தோனியை எப்படியாவது சிறிது நேரம் நேரலையில் இருந்து பேசவையுங்கள் எனக்கூறினார்" இதற்கு பதிலளித்த தோனி, சிரித்த முகத்துடன் அனைவருக்கும் "ஹாய்" என்று மட்டும் கூறிவிட்டு, வெளியேறிவிட்டார்.

டி20 கிரிக்கெட் தொடர்

டி20 கிரிக்கெட் தொடர்

வெஸ்ட் இண்டீஸுடனான டி20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சீனியர் வீரர்கள் விளையாடுகின்றனர். இதற்காக கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோர் ட்ரினிடாட் சென்றடைந்துள்ளனர். இரு அணிகளும் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் ஜூலை 29ம் தேதி தொடங்குகிறது.

Story first published: Wednesday, July 27, 2022, 9:43 [IST]
Other articles published on Jul 27, 2022
English summary
Dhoni in instagram live Chat ( இன்ஸ்டாகிராம் நேரலையில் எம்.எஸ்.தோனி ) இன்ஸ்டாகிராம் நேரலையின் போது திடீரென எம்.எஸ்.தோனி வந்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+