Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் இருந்து ராகுல் திடீர் நீக்கம்..சிஎஸ்கே வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: : இந்திய அணியில் இருந்து கே.எல்.ராகுல் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் திடீரென நீக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்றுடன் முடிவடைகிறது.

இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2 வெற்றிகளுடன் தொடரை கைப்பற்றிய நிலையில் 3வது போட்டியிலும் வெற்றிக்கு அருகில் சென்றுவிட்டது.

இலங்கை தொடர்

இலங்கை தொடர்

இந்த தொடர் முடித்தவுடன் இரு அணிகளும் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் வரும் பிப். 16, 18, 20ம் தேதிகளில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. ஒருநாள் தொடரை போன்று இந்த போட்டிக்கான இந்திய அணியும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

முக்கிய வீரர்கள் நீக்கம்

முக்கிய வீரர்கள் நீக்கம்

இந்நிலையில் இதில் இருந்து இந்திய அணியின் துணைக்கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ, 2வது ஒருநாள் போட்டியின் போது கே.எல்.ராகுலுக்கு கையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அக்‌ஷர் பட்டேல் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளதால் அவர் முழு உடற்தகுதியுடன் இல்லை என்றும் கூறியுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெறவுள்ளனர்.

சிஎஸ்கே சிங்கம்

சிஎஸ்கே சிங்கம்

இந்த 2 வீரர்களுக்கு மாற்றாக சிஎஸ்கேவின் அதிரடி வீரர் ருதுராஜ் கெயிக்வாட் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் அணிக்குள் சேர்க்கப்பட்டு பின்னர் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளார் ருதுராஜ் கெயிக்வாட். ஆனால் இந்த முறை கே.எல்.ராகுல் விலகியுள்ளதால் நிச்சயம் ருதுராஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அதிர்ஷ்டத்தில் ஹூடா

அதிர்ஷ்டத்தில் ஹூடா

இதே போல தீபக் ஹூடாவுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு பெற்ற ஹூடா லோயர் ஆர்டரில் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இதனையடுத்து அவருக்கு டி20 போட்டியிலும் பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது.

Story first published: Friday, February 11, 2022, 20:28 [IST]
Other articles published on Feb 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+