Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்.. எந்த சேனலில் பார்ப்பது? எந்த நேரம்? ஆடுகளம் எப்படி?

பிரிட்ஜ்டவுன் : இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நாளை தொடங்குகிறது. இது இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது

இது பார்பிடாஸ் பிரிஜ் டவுன் நகரில் நடைபெறுகிறது. இங்கு கடைசியாக ஆகஸ்ட் மாதம் 2022 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியும் நியூசிலாந்து அணியும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

India vs west indies odi series - telecast live streaming details - pitch and weather report

இதில் முதல் இன்னிங்சில் 190, 212 மற்றும் 301 ஆகிய ரன்கள் எடுக்கப்பட்டது. இந்த ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சாளர் மற்றும் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆகிய இருவர்களுக்கும் செயல்படும் வகையில் இருந்தாலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை அந்த தொடரில் இருந்தார்கள். மேலும் இந்த தொடரில் சுழற் பந்துவீச்சாளர்களும் குறைந்த அளவிலே ரன்களை கொடுத்திருந்தார்கள்.

இதனை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆடுகளம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தது போலேயே தோய்வாக இருக்கும் என கருதலாம். மேலும் வேகபந்துவீச்சாளர்களும் சுழற் பந்துவீச்சாளர்களும் சரிசமமான வகையில் இந்த ஆடுகளத்தில் செயல்படுவார்கள் என தெரிகிறது. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டி நடைபெறும் பிரிட்ஜ் டவுனில் மழைக்கான வாய்ப்பு குறைவு என தெரிகிறது. முதல் ஒருநாள் போட்டியின் போது 20% தான் மழை பெய்யும் என தெரிகிறது.

மேலும் இந்திய அணி கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் உடன் விளையாடுகிற 8 ஒரு நாள் போட்டிகளும் வெற்றி பெற்றிருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவை ஒரு நாள் கிரிக்கெட்டில் வீழ்த்தி நான்கு ஆண்டுகள் ஆகிறது. இந்தப் போட்டி டிடி சேனலில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தமிழில் இந்த கிரிக்கெட் போட்டியில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. டிடி பொதிகை சேனலில் தமிழில் கிரிக்கெட்டை பார்க்கலாம்.இதைப் போன்று ஓடிடியில் ஜியோ சினிமா மற்றும் ஃபேன் கோட்டிலும் இந்த கிரிக்கெட் போட்டிகளை பார்க்கலாம்.

Story first published: Wednesday, July 26, 2023, 19:02 [IST]
Other articles published on Jul 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+