Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பாட்ஷா..மாணிக் பாட்ஷா”.. ராகுல் டிராவிட்-ன் மாஸ் என்ட்ரி .. சிஎஸ்கே தந்த கவுரவம்.. வீடியோ இதோ!!

வெஸ்ட் இண்டீஸ்: ராகுல் டிராவிட் மாணிக் பாட்ஷா போன்று என்ட்ரி கொடுத்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு சென்றுள்ளது.

அங்கு வரும் ஜூலை 22ம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்

ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, பண்ட் உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. எனவே ஷிகர் தவான் தலைமையில் புதிய அணியை உருவாக்கியுள்ளனர். இதே போல டி20 தொடருக்கான அணியில் கோலி மற்றும் பும்ராவுக்கு மட்டும் ஓய்வு கொடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அணி

புதிய அணி

இதனையடுத்து ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ் சென்றடைந்தது. அயர்லாந்து தொடரில் கலக்கிய முக்கிய வீரர்கள் பலரும் தவான் தலைமையில் களமிறங்கவுள்ளனர். இதற்காக அடுத்த 2 நாட்களுக்கு அங்கு தீவிர பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவாரஸ்ய வீடியோ

சுவாரஸ்ய வீடியோ

இந்நிலையில் மைதானத்தில் என்ட்ரி கொடுப்பது போன்று தவான் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. கதவை திறந்துக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக இந்திய வீரர்கள் வர, கடைசியாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கெத்தாக வருகிறார். இதனை சாதாரண ஒரு ரீல்ஸ் போன்று தவான் செய்திருந்தாலும், சிஸ்கே மாஸ் வீடியோவாக மாற்றியுள்ளது.

சிஎஸ்கேவின் மாஸ் எடிட்

வழக்கம் போல தனது கிரியேட்டிவிட்டியை காட்டியுள்ள சிஎஸ்கே, இந்திய வீரர்கள் என்ட்ரி கொடுப்பதை 'மாணிக் பாட்ஷா' ஸ்டைலில் எடிட் செய்து பாட்ஷா இசையும் சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் பலரும் இதனை ஸ்டேட்டஸில் வைத்து வருகின்றனர். குறிப்பாக மாணிக் பாட்ஷாவை போன்று ராகுல் டிராவிட் தரும் என்ட்ரியும், அதற்கு 'பழைய ராகுல் டிராவிட்டை பாருங்கள்' என வரும் கமெண்ட்களும் தான் தனி கவனத்தை பெற்றுள்ளது.

Story first published: Wednesday, July 20, 2022, 15:56 [IST]
Other articles published on Jul 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+