Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“திருமணம் தான் காரணம்”.. முதல் ODI-ல் கே.எல்.ராகுல் விலகியதற்கு உண்மை காரணம்.. ரோகித்திற்கு சிக்கல்!

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகியதற்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் தொடங்குகிறது.

இதற்காக இந்திய அணி அகமதாபாத் சென்ற நிலையில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

 வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான், ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு தான் கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியில் கே.எல்.ராகுல் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அவரின் இடத்தை தவான், ருதுராஜ் நிரப்புவார்கள் எதிர்பார்த்த நிலையில் 2 ஓப்பனர்களுக்குமே தொற்று உறுதியாகியுள்ளது.

பிசிசிஐ திட்டம்

பிசிசிஐ திட்டம்

இப்படிபட்ட இக்கட்டான சூழலிலும் கூட கே.எல்.ராகுலை பிசிசிஐ அழைக்கவில்லை. முன்னதாக தென்னாப்பிரிக்க தொடரில் கே.எல்.ராகுலின் கேப்டன்சியில் அதிருப்தியடைந்த பிசிசிஐ, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட்-ஐ துணைக்கேப்டனாக செயல்பட வைத்து, அவரின் கேப்டன்சியையும் பார்த்துவிடலாம் என திட்டமிட்டிருந்தது. ஏனென்றால் 35 வயதாகப்போகும் ரோகித்திற்கு பின்னால் இந்திய அணியை அவர்கள் தான் வழிநடத்தவுள்ளனர். இதனால் தான் கே.எல்.ராகுல் முதல் போட்டியில் வெளியேற்றப்பட்டார் எனக்கூறப்பட்டது.

 உண்மை காரணம் என்ன

உண்மை காரணம் என்ன

இந்நிலையில் உண்மை காரணம் வெளிவந்துள்ளது. அதாவது கே.எல்.ராகுலின் உடன்பிறந்த சகோதரி பாவ்னாவிற்கு கர்நாடகாவில் திருமண நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துக்கொள்வதற்காக தான் கே.எல்.ராகுல் வெளியேறியுள்ளார். எனவே இதனால் அவரை அழைக்க முடியாத இக்கட்டான சூழலுக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் வரும் சீனியர்

மீண்டும் வரும் சீனியர்

ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் இறங்குவதற்காக சீனியர் வீரர் மயங்க் அகர்வால் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்று வந்த அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது போன்று ஒருநாள் தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மிடில் ஆர்டரில் ஏற்கனவே உள்ள வீரர்களை வைத்து சமாளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Story first published: Thursday, February 3, 2022, 19:07 [IST]
Other articles published on Feb 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+