Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவர அவ்ளோ சாதாரணமா நினைக்காத போலி”.. ரோகித்திற்காக குரல் கொடுத்த கோலி - ஆடியோவால் ரசிகர்கள் குஷி!

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மாவுக்காக விராட் கோலி குரல் கொடுத்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றியை விட விராட் கோலியின் கம்பேக் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 கோலியின் சேட்டைகள்

கோலியின் சேட்டைகள்

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் இருந்து நேரலைகளில் அவரை அதிகம் காட்டப்படுவதில்லை. ஃபீல்டிங்கில் ஏதேனும் சில நேரங்களில் மட்டுமே தென்படுகிறார். ஆனால் அதனை ஈடுகட்டும் வகையில் தான் கோலியின் ஸ்டம்ப் மைக் பஞ்ச்-கள் வெளியாகி இணையங்களை கலக்கி வருகிறது.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஸ்டம்ப் மைக் ஆடியோக்கள் வெளியாகின. இதே போல வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலியின் நடனம் வெளியாகின.

 ரன் அவுட் நிகழ்வு

ரன் அவுட் நிகழ்வு

இந்நிலையில் 2வது டி20 போட்டியிலும் சுவாரஸ்ய விஷயம் நடந்துள்ளது. ஆட்டத்தின் 8வது ஓவரின் 3வது பந்தை விராட் கோலி வேகமாக அடித்தார். ஆனால் அந்த பந்து, நான்ஸ்ட்ரைக்கர் எண்ட் திசைக்கு நேராக சென்றதால் பவுலர் ராஸ்டன் சேஸ் தடுத்து நிறுத்தினார். ஆனால் அதற்குள்ளாக நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்து ரோகித் சர்மா க்ரீஸை விட்டு வெளியே வந்துவிட்டார்.

கோலியின் ஆடியோ

கோலியின் ஆடியோ

அப்போது களத்தில் இருந்த கெயீரன் பொல்லார்ட் உடனே பந்தை எடுத்து ரோகித்தை ரன் அவுட்டாக்கு எனக்கூற, ராஸ்டன் சேஸ் முயற்சி செய்து தோல்வியுற்றார். இந்த நிகழ்வின் போது பேசிய விராட் கோலி, " ரோகித்தை இந்த மாதிரியெல்லாம் சாதாரணமாக ரன் அவுட் ஆக்கிவிட முடியாது போலி ( பொல்லார்ட்). அவருக்கு வேறு மாதிரி முயற்சி செய் என நகைச்சுவையுடன் கூறினார்.

Recommended Video

Virat Kohli மீது வைக்கப்பட்ட விமர்சனம்.. Rohit Sharma கொடுத்த பதிலடி!
சிறப்பு விஷயம்

சிறப்பு விஷயம்

ஐபிஎல் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, கெயிரன் பொல்லார்ட் மூவருமே மிக நெருக்கமானவர்கள். இவர்கள் மூவரும் ஜாலியாக உரையாடிக்கொண்ட வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக விராட் கோலி மீண்டும் தனது வழக்கமான ஃபார்முக்கு திரும்பியுள்ளது ஸ்பெஷல் ட்ரீட்டாக உள்ளது.

Story first published: Saturday, February 19, 2022, 11:59 [IST]
Other articles published on Feb 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+