Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”ரசிகர்களின் அந்த ஒரு செயல்”.. மீண்டும் திரும்பிய விண்டேஜ் ஃபார்ம்.. விராட் கோலி நெகிழ்ச்சி பேட்டி!

கொல்கத்தா: ரசிகர்கள் செய்த ஒரு விஷயத்தால் மனதிற்குள் ஒரு புதிய புத்துணர்ச்சி ஏற்பட்டு அரைசதம் அடிக்க முடிந்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று படு சுவாரஸ்யமாக நடைபெற்றது.

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் தொடரையும் 2 - 0 என கைப்பற்றியது.

 விண்டேஜ் விராட் கோலி

விண்டேஜ் விராட் கோலி

நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது விராட் கோலி - ரிஷப் பண்ட் ஆகியோரின் அரைசதம் தான். அதிலும் குறிப்பாக பழைய விராட் கோலியை பார்க்க முடிந்தது. எந்தவித பதற்றமும், தயக்கமும் இன்றி விளையாடிய கோலி 41 பந்துகளில் 52 ரன்களை விளாசினார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை அடித்தது தான். இதனையடுத்து விராட் கோலி பேக் டூ ஃபார்ம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 கோலி பதில்

கோலி பதில்

இந்நிலையில் இந்த மாற்றத்திற்கு ரசிகர்கள் செய்த ஒரு விஷயம் தான் காரணம் என பேசியுள்ளார். போட்டியின் போது பேசிய அவர், மைதானத்தில் எப்போதும் ரசிகர்கள் கூட்டம் இருந்தாலே எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுக்கும். அதுவும் நேற்று என்னை சுற்றி உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த ஒன்றரை வருடமாக மைதானத்தில் எந்தவொரு கூட்டத்தையும் காணாமல் இருந்தேன். சில நேரங்களில் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

அவுட்டானால் மகிழ்ச்சி

அவுட்டானால் மகிழ்ச்சி

நான் களமிறங்கிய போதே, பெரும் நம்பிக்கையுடன் ஷாட்களை ஆட வேண்டும் என சென்றேன். இடையில் விக்கெட்டுகள் விழும்போது கூட நான் அதை தொடர்ந்து செய்தேன். இன்று ஒரு மகிழ்ச்சி நிகழ்வும் இருந்தது. ஒரு ஷாட்டை ஆடலாமா? வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருந்து அவுட்டாகி செல்வேன். ஆனால் இன்று அது எதுவும் இன்றி தைரியமாக ஆடி அவுட்டானது மகிழ்ச்சியாக உள்ளது என விராட் கோலி கூறினார்.

ரோகித் பாராட்டு

ரோகித் பாராட்டு

இதுகுறித்து பேசியிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இன்று மிகச்சிறப்பாக விளையாடியிருந்தார். அவரின் பேட்டிங் மற்றும் களத்தில் உதவியவை எனது தோளின் மீதிருந்த சில பாரங்களை குறைத்தது. மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, February 19, 2022, 12:08 [IST]
Other articles published on Feb 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+