இன்னும் 6 ரன்கள் தான்.. விராட் கோலி படைக்கப்போகும் மெகாசாதனை.. சச்சினுக்கு பிறகு செய்யும் 2வது வீரர்
அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட் கோலி மெகா சாதனை ஒன்றை படைக்கவுள்ளார்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட தொடர் வரும் பிப்ரவரி 6ம் தேதியன்று அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது.
இந்த தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக இருந்த போதும், விராட் கோலியின் மீது தான் அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.

கோலியின் காத்திருப்பு
2 ஆண்டுகளாக சதமடிப்பதற்காக காத்திருக்கும் விராட் கோலி, கடந்த தென்னாப்பிரிக்க தொடரிலும் அதற்காக அதிக முயற்சிகள் எடுத்து ஏமாற்றத்தை சந்தித்தார். இந்த முறை இந்திய களத்தில் நடைபெறுவதால், இதில் அவர் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக இன்னும் 6 ரன்களில் பெரும் சாதனை படைக்க வாய்ப்புகள் உள்ளது.

பெரிய மைல்கல்
முதல் போட்டியில் விராட் கோலி இன்னும் 6 ரன்களை அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 5,000 ரன்களை கடந்தவர் என்ற பெருமையை பெறுவார். இந்த சாதனையை படைக்கப்போகும் 2வது இந்தியர் கோலி ஆகும். இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே இந்தியாவில் 5000 ரன்களை அடித்துள்ளார்.

சுவாரஸ்ய நிகழ்வு
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சச்சின் டெண்டுல்கரும் இந்த சாதனையை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் தான் படைத்திருந்தார். அவர் தனது 121வது இன்னிங்ஸில் படைத்தார். விராட் கோலி தற்போது தனது 96வது இன்னிங்ஸில் இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக படைக்கவுள்ளார்.
Recommended Video

போட்டி நடப்பதில் சிக்கல்
இது ஒருபுறம் இருக்க, இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெறுமா என்பதிலேயே சிக்கல் உள்ளது. இந்திய அணியில் தவான், ருதுராஜ், ஸ்ரேயாஸ் உட்பட 8 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications