Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“ருதுராஜுக்கு வாய்ப்பே தராதீங்க” ரோகித்துக்கு வசீம் ஜாஃபர் அவசர அட்வைஸ்.. பின்னணியில் முக்கிய ஆப்பு

கொல்கத்தா: ருதுராஜ் கெயிக்வாட்-ஐ ப்ளேயிங் 11ல் சேர்த்துவிடவே கூடாது என முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் அடம்பிடித்துள்ளார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 வெற்றிகளுடன் இந்தியா கைப்பற்றியுள்ளது.

3வது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ள சூழலில் திடீரென அணிக்குள் குழப்பம் அதிகரித்து வருகிறது.

திடீர் குழப்பம்

திடீர் குழப்பம்

இந்திய அணியின் பபுளில் இருந்து விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் வெளியேறியுள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறியுள்ளதாகவும் 3வது டி20ல் பங்குபெற மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களின் இடத்தை நிரப்புவதற்காக அனைவரின் கவனமும் ருதுராஜ் கெயிக்வாட் மீது திரும்பியுள்ளது.

ருதுராஜின் நிலை

ருதுராஜின் நிலை

ஒவ்வொரு முறையும் அணிக்குள் சேர்க்கப்படும் அவர், வாய்ப்புகாக காத்திருந்து தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். நியூசிலாந்து தொடரில் கே.எல்.ராகுல் - ரோகித் ஓப்பனிங் இறங்கினர். தென்னாப்பிரிக்க தொடரில் ராகுல் மற்றும் தவான் ஜோடி சேர்ந்தனர். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலாவது வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால் இஷான் கிஷானுக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. இதனால் ஒரு போட்டியிலாவது கெயிக்வாட்டிற்கு வாய்ப்பு தாருங்கள் என ரசிகர்கல் கோரி வருகின்றனர்.

வசீம் ஜாஃபர் அட்வைஸ்

வசீம் ஜாஃபர் அட்வைஸ்

இந்நிலையில் என்ன ஆனாலும் 3வது டி20ல் ருதுராஜுக்கு வாய்ப்பு தரக்கூடாது என வசீம் ஜாஃபர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், கெயிக்வாட் சிறிது காலம் பொறுத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஒரே ஒரு போட்டியில் வாய்ப்பு தருவதில் எந்தவொரு பலனும் இல்லை. அதனை வைத்து முடிவு செய்யவும் முடியாது. தேவையின்றி வீரர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு அவுட்டாக செய்வார்கள்.

Recommended Video

Kohli and Pant Leaves Bio Bubble, rested for Sri Lanka's T20 Squad | OneIndia Tamil
 டிராவிட் முடிவு

டிராவிட் முடிவு

ஜாஃபரின் கருத்தை தான் டிராவிட்டும் சிந்திருப்பது போன்று தெரிகிறது. ஓப்பனிங்கில் வழக்கம் போல ரோகித் - இஷான் கிஷான் களமிறங்கட்டும், முதல் விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயரை களமிறக்கலாம் என்ற முடிவில் அவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Saturday, February 19, 2022, 13:08 [IST]
Other articles published on Feb 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+