Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - வெஸ்ட்இண்டீஸ் தொடர் அட்டவணை வெளியிட்டது பிசிசிஐ…2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே நடக்க உள்ள கிரிக்கெட் போட்டிகள் குறித்த அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ.

அப்போது, இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. தற்போது நடந்து வரும் இங்கிலாந்து தொடர் முடிந்த உடன், இந்தியா ஆசிய கோப்பை தொடரில் ஆட உள்ளது. அதற்கான அணி சில நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது.

India vs WestIndies series complete schedule, timings, dates and venues here

அந்த தொடர் முடிந்த ஒரே வாரத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடர் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க உள்ளது.

முதலில் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் லக்னோ மைதானத்தில் நடைபெற உள்ள இரண்டாவது டி20 போட்டி தான், அந்த மைதானத்தின் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆகும்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர் அட்டவணை :

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட் - அக்டோபர் 4-8 வரை - ராஜ்கோட்

இரண்டாவது டெஸ்ட் - அக்டோபர் 12-16 வரை - ஹைதராபாத்

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள் போட்டி - அக்டோபர் 21 - கவ்ஹாத்தி

இரண்டாவது ஒருநாள் போட்டி - அக்டோபர் 24 - இன்டோர்

மூன்றாவது ஒருநாள் போட்டி - அக்டோபர் 27 - புனே

நான்காவது ஒருநாள் போட்டி - அக்டோபர் 29 - மும்பை

ஐந்தாவது ஒருநாள் போட்டி - நவம்பர் 1 - திருவனந்தபுரம்

டி20 தொடர்

முதல் டி20 - நவம்பர் 4 - கொல்கத்தா

இரண்டாவது டி20 - நவம்பர் 6 - லக்னோ

மூன்றாவது டி20 - நவம்பர் 11 - சென்னை

Story first published: Tuesday, September 4, 2018, 16:43 [IST]
Other articles published on Sep 4, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+