Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு திரும்பிய கே.எல்.ராகுல் – எந்த இளம் வீரரின் இடம் பறிபோகும்..??

அகமதாபாத்: இந்தியா, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை மதியம் நடைபெறுகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் நாளைய போட்டியை வென்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும். இந்த நிலையில், முதல் போட்டியில் களமிறங்காத கே.எல்.ராகுல், நாளைய போட்டியில் இந்திய அணிக்கு திரும்புகிறார்.

தலைவலி

தலைவலி

இதனால், கே.எல்.ராகுலுக்கு பதிலாக எந்த வீரரை வெளியே உட்கார வைக்கலாம் என்ற தலைவலி, ரோகித் சர்மா, டிராவிட் ஜோடிக்கு ஏற்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், ஒருநாள் போட்டிகளில் நடுவரிசையில் தான் களமிறங்குகிறார். ஆனால், தென்னாப்பிரிக்க தொடரில் தொடக்க வீரராக களமிறங்கினார்.

நடுவரிசை?

நடுவரிசை?

இதனால், ஒருநாள் போட்டிகளில் ராகுல் தொடக்க வீரரா இல்லை நடுவரிசை வீரரா என்று பார்க்கும் நமக்கு மட்டும் அல்ல, விளையாடும் அவருக்கே சந்தேகம் ஏற்பட்டு இருக்கும். அணியில் ஷிகர் தவான் சேர்க்கப்பட்டதால், ராகுலுக்கு நடுவரிசை தான் என்று அணி நிர்வாகம் முடிவு எடுத்து இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

குழப்பம்

குழப்பம்

ஆனால், ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட் என இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மாயங் அகர்வால், இஷான் கிஷண் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல் போட்டியில் இஷான் கிஷண் தொடக்க வீரராக களமிறங்கினார். தற்போது கே.எல்,ராகுல் திரும்பியதால் அவர் தொடக்க வீரராக களமிறங்குவாரா இல்லை நடுவரிசையில் களமிறங்குவாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

Rishabh Pant-க்கு வாய்ப்பு கொடுத்த BCCI.. Dhoni-ன் வார்த்தைகளை நினைவுகூரும் ரசிகர்கள்
தீபக் ஹூடா

தீபக் ஹூடா

தொடக்க வீரராக இருந்தால் இஷான் கிஷணின் இடம் பறிபோகும், நடுவரிசையில் இறங்கினால் தீபக் ஹூடாவின் இடம் பறிப்போகும். தீபக் ஹூடாவுக்கு சுழற்பந்தும் வீச தெரியும் என்பதால், அணியின் Combination களுக்கு அவர் நடுவரிசையில் இறங்குவதே சரியானதாக இருக்கும். ஆனால் ஷிகர் தவான் திரும்பினால் ராகுலுக்கு தான் நடுவரிசையில் முன்னுரிமை வழங்கப்படும். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இந்திய அணி நிர்வாகம் குழம்பி போய் உள்ளது.

Story first published: Tuesday, February 8, 2022, 11:46 [IST]
Other articles published on Feb 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+