For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. யாருக்கு வாய்ப்பு?

ஹராரே: இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 18ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களுக்கு ஒய்வு வழங்கப்பட்டு இருக்கிறது

முழு உடல் தகுதியை பெற்ற கேஎல் ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக திரும்புகிறார். பல இளம் வீரர்களுக்கு இந்த தொடர் வாய்ப்பு வழங்கி உள்ளதால் இந்திய ரசிகர்களிடையே, இந்த தொடர் கவனத்தை ஈர்த்துள்ளது.

 India vs Zimbabwe 1st odi – Playing xi – Preview and prediction

தொடக்க வீரராக அனுபவ வீரர் ஷிகர் தவான் களமிறங்குவார். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தவானுக்கு ஜோடியாக சுப்மான் கில் விளையாடினார். ஆனால் இந்த தொடரில் ராகுல் திரும்பியதால், அவர் தொடக்க வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுப்மான் கில் 3வது வரிசையில் விளையாடலாம்.

இந்த தொடரில் அனைவரின் எதிர்பார்ப்பையும் எற்படுத்தியுள்ளது இந்திய அணியின் நடுவரிசை தான். ஏனென்றால், இந்த தொடரில் முற்றிலும் பெரிய அனுபவம் இல்லாத வீரர்களையே இந்தியா தேர்வு செய்துள்ளது. 4வது வீரராக தீபக் ஹூடாவும், 5வது வீரராக சஞ்சு சாம்சனும் விளையாடலாம். 6வது வீரராக வாசிங்டன் சுந்தர் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் வேறு வழியின்றி தொடக்க வீரர் ராகுல் திரிபாதிக்கு நடுவரிசையில் 6வது இடத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். 7வது வீரராக ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேலுக்கு தேர்வுக்குழு வாய்ப்பு வழங்கியுள்ளது. இதைனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய கூடிய வேகப்பந்துவீச்சாளராக சர்துல் தாக்கூர் அல்லது தீபக் சாரை தேர்வு செய்யலாம். இதே போன்று அவேஷ் கான், சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் கடைசி 3 இடத்தை பிடிக்கலாம்.

பிளேயிங் லெவன்

1, ஷிகர் தவான், 2, கேஎல் ராகுல், 3, சுப்மான் கில், 4, தீபக் ஹூடா, 5, சஞ்சு சாம்சன், 6, ராகுல் திரிபாதி/வாசிங்டன் சுந்தர். 7, அக்சர் பட்டேல். 8, ஷர்துல் தாக்கூர் / தீபக் சாஹர், 9, அவேஷ் கான் / பிரசித் கிருஷ்ணா, 10, முகமது சிராஜ், 11, குல்தீப் யாதவ்

Story first published: Sunday, August 14, 2022, 16:30 [IST]
Other articles published on Aug 14, 2022
English summary
India vs Zimbabwe 1st odi – Playing xi – Preview and prediction ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. யாருக்கு வாய்ப்பு?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+