IND vs ZIM: 2 அதிரடி வீரர்கள் நீக்கம்.. பத்ரிநாத் தேர்வு செய்த இந்தியா பிளேயிங் XI
ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் சிஎஸ்கே வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் தேர்வு செய்துள்ளார். இன்று வியாழக்கிழமை ஹராரேவில் நடைபெறவுள்ள இந்த போட்டிக்கான அணியில் இளம் வீரர்கள், அறிமுக வீரர்கள் மற்றும் 2026 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சில வீரர்களை அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் காண்கின்றனர்.
மிடில் ஆர்டரில் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா ஆகியோர் 3 முதல் 5 வரையிலான இடங்களில் களமிறங்குகின்றனர். ஆல்-ரவுண்டர்களாக சிவம் துபே மற்றும் சூர்யான்ஷ் ஷெட்ஜ் ஆகியோரை முறையே 6 மற்றும் 7-வது இடங்களில் பத்ரிநாத் தேர்வு செய்துள்ளார. சுழற்பந்து வீச்சாளர்களாக ஹர்ஷ் துபே மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரையும், வேகப்பந்து வீச்சாளர்களாக பிரின்ஸ் யாதவ் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோரையும் அவர் இணைத்துள்ளார்.

இந்த அணியில் பிரப்சிம்ரன் சிங், ரிங்கு சிங், யாஷ் தாக்கூர் மற்றும் அசோக் சர்மா ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.பத்ரிநாத் பிளேயிங் லெவன்: வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, சிவம் துபே, சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஹர்ஷ் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.
சொந்த மண்ணில் 2026 டி20 உலகக் கோப்பையை வென்றதற்குப் பிறகு, இந்திய அணி டி20 போட்டிகளில் கடுமையான பின்னடைவைச் சந்தித்து வருகிறது. புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் தலைமையின் கீழ் விளையாடிய கடந்த 6 டி20 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. அயர்லாந்துக்கு எதிராக 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 0-4 என்ற கணக்கிலும் இந்தியா படுதோல்வி அடைந்தது.
2019-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குப் பிறகு இந்தியா அடுத்தடுத்து இரண்டு டி20 தொடர்களை இழப்பது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், கடந்த 2026 டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி அணிக்கு நம்பிக்கையளிப்பதாக அமையும். அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 256/4 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ஜிம்பாப்வே அணியை 184/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி, 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா இதுவரை ஜிம்பாப்வேக்கு எதிராக இருதரப்பு டி20 தொடரை இழந்ததே இல்லை. இரு அணிகளுக்கும் இடையிலான 14 போட்டிகளில் இந்திய அணி 11-3 என்ற கணக்கில் வலுவான முன்னிலையில் உள்ளது. மேலும், கடந்த ஐந்து டி20 போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணியை இந்தியா வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications

