Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விட்ராதீங்க சார்.. நாளை கடைசி போட்டி.. பாவப்பட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை தொடங்குகிற நிலையில் இந்த ஆட்டத்தில் எவ்வித மாற்றங்களை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும் என்பதை தற்போது காணலாம்.

Recommended Video

IND vs ZIM இந்திய வீரர் Shubman Gill சதம் அடித்து அசத்தல் *Cricket

ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டி சமிபிரதாய ஆட்டமாக தான் அமையும்.

இதனால் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு நாளை பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

ருத்துராஜ் கெய்க்வாட்

ருத்துராஜ் கெய்க்வாட்

தொடக்க வீரராக கே.எல ராகுல் களமிறங்குவது அவசியமாக கருதப்படுகிறது. ஏனெனில் ஆசிய கோப்பை போட்டிக்கு முன் அவர் தனது பார்மை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் அவர் நாளைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் ஷிகர் தவானுக்கு ஓய்வு வழங்கப்பட்டு ருத்துராஜ் கெய்க்வாட்டை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம்.

ராகுல் திரிபாதி

ராகுல் திரிபாதி

ருத்துராஜ் கெய்க்வாட்டை கடந்த சில நாட்களாகவே எவ்வித கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் அணியில் நீடிக்கிறார். இதனால் அவருக்கு கடைசியாக ஒரு வாய்ப்பு வழங்குவது அவசியம். இதேபோன்று இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 31 வயதான அனுபவ மற்றும் திறமையும் கலந்த ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு வழங்குவது முக்கியமாகும். இது போல் கிடைக்கும் ஒரு வாய்ப்புக்காக தான் அவர் பல முயற்சிகளை செய்திருக்கிறார்.

சுழற்சி முறை

சுழற்சி முறை

மேலும் இந்திய அணிக்கு கடைசி கட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஷாபாஸ் அஹமதுக்கு நடுவரசையில் வாய்ப்பு வழங்கலாம். அக்சர் பட்டேலுக்கு ஓய்வு வழங்கிவிட்டு ஷாபாஸ் அகமதை பிளேயிங் லெவனில் சேர்க்கலாம். வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கலாம்.முகமது சிராஜிக்கு ஓய்வு வழங்கிவிட்டு தீபக்சாஹரையும் மீண்டும் அணிக்கு கொண்டு வரலாம். தீபக் சாஹருக்கு காயம் ஏதும் இல்லை என்றும் சுழற்சி முறையில் பயன்படுத்துவதற்காக அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உத்தேச பிளேயிங் லெவன்

உத்தேச பிளேயிங் லெவன்

1.கேஎல் ராகுல், 2, ருத்துராஜ் கெய்க்வாட், 3, இஷான் கிஷன், 4, தீபக் ஹூடா, 5, ராகுல் திரிபாதி, 6, சஞ்சு சாம்சன், 7, ஷாபாஸ் அகமது, 8, தீபக் சாஹர், 9, ஷர்துல் தாக்கூர், 10, குல்தீப் யாதவ், 11, ஆவேஷ் கான்

Story first published: Sunday, August 21, 2022, 21:41 [IST]
Other articles published on Aug 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+