For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“விட்றாதீங்க யப்போ..” கே.எல்.ராகுலுக்கு கெடு விதித்த பிசிசிஐ..3வது ஒருநாள் போட்டியில் உள்ள கண்டம்!

மும்பை: ஜிம்பாப்வே அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுலுக்கு முக்கிய சிக்கல் எழுந்துள்ளது.

Recommended Video

IND vs ZIM 3rd ODI 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி *Cricket

இரு அணிகளும் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் ஹராரேவில் நடைபெறவுள்ளது

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி 2 வெற்றிகளை பெற்று கைப்பற்றிய நிலையில் வைட் வாஷ் செய்ய காத்துள்ளது.

3வது போட்டி

3வது போட்டி

இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் பவுலிங் என மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் கேப்டன் கே.எல்.ராகுலின் நிலைமை தான் கவலையளிக்கும் வகையில் உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கியதால் பேட்டிங்கில் இடம் கிடைக்கவில்லை. 2வது போட்டியில் ஓப்பனிங் களமிறங்கியும் சொதப்பிவிட்டார்.

திணறல்

திணறல்

2வது போட்டியில் தொடக்கத்திலேயே திணறிய கே.எல்.ராகுல் 5 பந்துகளில் ஒரு ரன்னை மட்டுமே எடுத்து அவுட்டானார். இதனால் இந்திய ரசிகர்களுக்கும், தேர்வுக்குழு அதிகாரிகளுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆசிய கோப்பை தொடர் தான். கே.எல்.ராகுல் மீது நம்பிக்கை வைத்து பிசிசிஐ பெரும் ரிஸ்க் எடுத்துள்ளது.

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடருக்கு பின் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதன்பின்னர் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். இப்படிபட்ட சூழலில் தான் நேரடியாக ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு ஓப்பனிங் களமிறங்க வாய்ப்பு கொடுத்துள்ளனர்.

இக்கட்டான சூழல்

இக்கட்டான சூழல்

நீண்ட நாட்களாக விளையாடாமல் இருந்தவருக்கு நேரடியாக ஆசிய கோப்பையில் வாய்ப்பு தந்தனர். ஜிம்பாப்வே தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவதை வைத்து தான் ஆசிய கோப்பையில் அவர் விளையாடுவதில் நம்பிக்கை கிடைக்கும். இன்று நடைபெறும் 3வது போட்டி தான் ராகுலுக்கு கடைசி வாய்ப்பு. ஒருவேளை சொதப்பினால் அவர் நீக்கப்பட்டு, ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, August 22, 2022, 12:24 [IST]
Other articles published on Aug 22, 2022
English summary
India vs zimbabwe 3rd ODI: KL Rahul's Last chance to Play Asia cup 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+