Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM -ருதுராஜ் மீது அப்படி என்ன பொறாமை? வேண்டும் என்றே வெளியே அனுப்பிய கில்

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சீனியர் வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் ஜூனியர் வீரர்கள் பங்கு பெற்ற இந்த தொடரில் கில் தலைமையிலான இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில் சம்பிரதாய ஆட்டமாக இன்றைய போட்டி நடைபெறுகிறது. இதில் இந்த தொடரில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் பெரும்பாலான வீரர்கள் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.

ind vs zim ruturaj shubman gill

இந்த நிலையில் ரியான் பராக், முகேஷ் குமார் ஆகியோர் இன்றைய ஆட்டத்தில் பிளேயிங் லெவனுக்கு திரும்பி இருக்கிறார்கள். இந்த சூழலில் ஏற்கனவே இந்த தொடரில் தன்னுடைய திறமையை நிரூபித்த ஜெயஷ்வாலுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ்க்கு கேப்டன் கில் மன்தில் ஓய்வு வழங்கியிருக்கிறார்.

இந்த தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் கில் (157 ரன்கள்) முதலிடமும், ருதுராஜ் (133 ரன்கள்) 2வது இடத்திலும் உள்ளனர். மேலும் டி20 தரவரிசை பட்டியலில் ருதுராஜ் ஏழு ஏழாவது இடத்திற்கு முன்னேறி அசத்தி இருக்கிறார். மேலும் பிளேயிங் லெவனில் தொடக்க வீரராக அறியப்பட்ட ருதுராஜ் தொடர்ந்து பேட்டிங் வரிசையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். எனினும் தமக்கு எந்த இடம் வழங்கினாலும் அதில் தமது திறமையை நிரூபிப்பேன் என்று ருதுராஜ் அதிரடி காட்டினார்.

இந்த நிலையில் ரியான் பராக்கிற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக ருதுராஜ் நீக்கப்பட்டிருப்பது சிஎஸ்கே ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்கள், வேண்டுமென்றால் ஜெய்ஸ்வால் போன்ற வீரரை வெளியே அனுப்பி இருக்கலாம்.

ஆனால் எப்போதாவது ஒருமுறை வாய்ப்பு கிடைக்கும் ருதுராஜை சகில் வெளியே உட்கார வைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.மீதான பொறாமை காரணமாக கில் இவ்வாறு செயல்படுகிறார் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமது இடத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காக ருதுராஜை கில் வெளியே அனுப்பி விட்டார் என்றும் ரசிகர்கள் குறை கூறி வருகின்றனர்.

Story first published: Sunday, July 14, 2024, 16:36 [IST]
Other articles published on Jul 14, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+