Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM முதல் போட்டி இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு தொடங்கும்? எந்த சேனலில் பார்ப்பது?

ஹராரே: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் துவங்க உள்ளது. ஜூலை 6 அன்று இந்த டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் எந்த மைதானத்தில் நடைபெறும்? இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு போட்டிகள் துவங்கும்? எந்த தொலைக்காட்சி மற்றும் மொபைல் செயலியில் இந்த தொடர் ஒளிபரப்பாகும்? என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

இந்தியா - ஜிம்பாப்வே மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 6 அன்றும், இரண்டாவது போட்டி ஜூலை 7 அன்றும் நடைபெறும். மூன்றாவது போட்டி ஜூலை 10, நான்காவது போட்டி ஜூலை 13 மற்றும் ஐந்தாவது போட்டி ஜூலை 14 அன்று நடைபெறும். இந்த ஐந்து போட்டிகளும் ஜிம்பாவே-வில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது.

IND vs ZIM india zimbabwe

இந்தியா - ஜிம்பாப்வே டி20 போட்டிகள் இந்திய நேரப்படி எத்தனை மணிக்கு துவங்கும்?

இந்த தொடரின் ஐந்து போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு துவங்கும்.

இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடரை எந்த சேனலில் பார்ப்பது?

இந்தியா - ஜிம்பாப்வே டி20 தொடர் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்-கில் ஒளிபரப்பாகும். சோனி ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் இந்த போட்டிகளை காணலாம். கேபிள் மற்றும் டிஷ் நெட்வொர்க்-களில் சோனி குழும சேனல்கள் பலவற்றை இலவசமாக காண முடியாது. எனவே, இந்த கிரிக்கெட் தொடரை பார்க்க விரும்பினால் உங்கள் தொலைக்காட்சியில் சோனி ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பாவதை உறுதி செய்து கொள்ளவும்.

இந்தியா ஜிம்பாவே டி20 தொடர் எந்த மொபைல் செயலியில் பார்ப்பது?

இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ள டி20 தொடர் சோனி லைவ் மொபைல் செயலியில் ஒளிபரப்பாகும். இந்த மொபைல் செயலியில் இலவசமாக இந்த போட்டிகளை பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. சோனி லைவ் செயலியில் ஒரு மாதத்திற்கு 299 ரூபாய் சந்தா செலுத்த வேண்டும். சந்தா செலுத்தியவர்கள் மட்டுமே கிரிக்கெட் போட்டிகளை மொபைல் அல்லது லேப்டாப்பில் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 5, 2024, 14:54 [IST]
Other articles published on Jul 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+