Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM - இந்திய அணியின் 2வது ஸ்பின்னர் யார்? வாஷிங்டன் சுந்தர் vs அபிஷேக் சர்மா இடையே போட்டி

ஹராரே : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை எடுத்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்தியா ஜிம்பாப்வே-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முற்றிலும் இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி இந்த தொடரில் விளையாடுவதால், இது ஒரு புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் ஹராரே ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதமாக செயல்படும்.

ind vs zim shubman gill cricket

இதனால் இந்தியாவில் சுழற் பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரவி பிஸ்னாய்க்கு கண்டிப்பாக வாய்ப்பு இருக்கும். எனென்றால், ஸ்பின்னர் ஆக அவர் மட்டும்தான் அணியில் இடம் பிடித்திருக்கிறார். இந்த சூழலில் இரண்டு சுழற் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் அணியில் இருக்கிறார்கள்.

இதில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கப்படும் என்பதை தற்போது பார்க்கலாம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா, வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். இதில் வாஷிங்டன் சுந்தர் சீனியர் வீரராக இருக்கிறார்.
24 வயது ஆனாலும் வாஷிங்டன் சுந்தர் 17 வயதில் இந்திய அணிக்காக விளையாட ஆரம்பித்தார்.

இன்னும் ஜடேஜா போன்ற வீரர்கள் தொடர்ந்து டி20 போட்டிகளில் விளையாடி வந்ததால் வாஷிங்டன் சுந்தருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் இதுவரை 43 டி20 போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். மேலும் இதுவரை 17 ரன்கள் அடித்திருக்கிறார். அதிகபட்சமாக 50 ரன்கள் வாஷிங்டன் சுந்தர் அடித்திருக்கிறார்.

இதனால் அடுத்த ஜடேஜா என்ற இடத்திற்கு ஒரு ஆள் வேண்டும் என்றால் அது வாஷிங்டன் சுந்தர் ஆக தான் இருக்க வேண்டும். எனினும் அபிஷேக் ஷர்மா ஐ பி எல் தொடரில் அபாரமாக விளையாடி புயல் போல் இந்திய அணிக்குள் நுழைந்து இருக்கிறார். இதுவரை இந்திய அணிக்காக ஒரு சர்வதேச போட்டியிலும் அபிஷேக் ஷர்மா விளையாடவில்லை. ஆனால் அபிஷேக் ஷர்மா தொடக்க வீரராகவும் சுழற் பந்து வீசக்கூடிய பவுலராகவும் இருக்கிறார்.

ஆனால் தற்போது இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்கு ஆள் அதிகமாக இருக்கிறது. இதனால் அபிஷேக் ஷர்மா நடு வரிசையில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமக்கு எந்த இடத்தில் வாய்ப்பு கொடுத்தாலும் நான் அதிரடியாக விளையாடுவேன் என்ற உத்வேகத்தை அபிஷேக் ஷர்மா கொண்டு இருந்தால் நிச்சயம் அவர் சாதிப்பார் இருந்தாலும் யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதைப் போன்று இளம் வீரர் ரியான் பராக்கிற்கும் சுழற் பந்து வீசத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 5, 2024, 16:39 [IST]
Other articles published on Jul 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+