Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கையை தூக்கி தூரப் போடு.. ஆஸி.யை இழுத்து இங்க போடு.. சுளுக்கெடுக்க தயாராகும் இந்தியா!

டெல்லி: இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என வென்றதுடன், ஒருதினப் போட்டித் தொடரையும் இந்திய அணி வென்றுள்ளது. 5 போட்டிகளில் 3-0 இந்தியா முன்னிலையில் உள்ளது.

டோணி விளையாடும் 300வது ஒருதினப் போட்டியிலும் வென்று, 4-0 என முன்னிலை பெற்று, ஒயிட்வாஷ் செய்வதற்கு இந்தியா தயாராக உள்ளது.

இந்தத் தொடர் முடிந்ததும், அடுத்ததாக, ஆஸ்திரேலியா அணி இந்தியாவுக்கு வருகிறது. 5 ஒருதினப் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்கள் நடக்க உள்ளன.

அடி வாங்கும் ஆஸ்திரேலியா

அடி வாங்கும் ஆஸ்திரேலியா

தற்போது வங்கதேசம் சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், டெஸ்ட் போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலியா அணியை, 20 ரன்களில் வென்றது வங்கதேசம்.

இங்க அடிச்சா அங்க வலிக்கும்

இங்க அடிச்சா அங்க வலிக்கும்

இங்க அடிச்சா அங்க வலிக்கும் என்பதற்கு எதிர்மாறாக, வங்கதேசம் கொடுத்த அடி, இந்தியாவுக்கு தெம்பை அளித்துள்ளது. இலங்கைக்கு எதிராக வென்றுவிட்டோம். அடுத்து வலுவான ஆஸ்திரேலியாவை சந்திக்க வேண்டியிருக்கே என்று உள்ளுக்குள் ஒரு கிலி, நமது இளம் வீரர்களுக்கு இருந்திருக்கும்.

காத்திருக்கும் புலிகள்

காத்திருக்கும் புலிகள்

தற்போது, அந்த கிலியில் விடுபட்டுள்ள நம்முடைய புலிகள், ஆஸ்திரேலியாவை சந்திக்க ஜாலியாக உள்ளன. 1877ல் இங்கிலாந்துடன் உலகின் முதல் டெஸ்ட் போட்டியில் துவங்கி, ஆஸ்திரேலியா இதுவரை, 801 டெஸ்ட் போட்டிகளில், 377ல் வெற்றி, 215ல் தோல்வி, 207ல் டிரா செய்துள்ளது.

தெம்பு வந்துருச்சு பாஸ்

தெம்பு வந்துருச்சு பாஸ்

இரண்டு டெஸ்ட் போட்டிகள் டையில் முடிந்துள்ளன.

இவ்வளவு வலுவான புள்ளி விவரங்கள் உள்ள ஆஸ்திரேலியாவை வங்கதேசம் வென்றுள்ளதால், நமது வீரர்களுக்கு ஒரு தெம்பு ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கை.. அதுதானே வாழ்க்கை

நம்பிக்கை.. அதுதானே வாழ்க்கை

ஆஸ்திரேலியா ஒரு சோட்டா அணி அல்ல என்பது நமது வீரர்களுக்கு தெரியும். எனினும், வங்கதேச அணிக்கு எதிரான தோல்வி, இந்திய வீரர்களுக்கு கண்டிப்பாக மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும்.

Story first published: Thursday, August 31, 2017, 12:14 [IST]
Other articles published on Aug 31, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+