Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யாருமே எதிர்பார்க்கல.. பயிற்சி ஆட்டத்தில் பாஸ் ஆன இளம் வீரர்.. ஒரே போட்டியில் ரிஷப் பண்ட்க்கு ஆப்பு?

லெஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில், இந்திய அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்றினர்.

லெஸ்டர்சைர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. அணியில் இருக்கும் வீரர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதற்காக இந்திய அணியில் 11 வீரர்களும், புஜாரா, பும்ரா, ரிஷப் பண்ட்,பிரசித் கிருஷ்ணா ஆகிய 4 வீரர்களும் எதிரணியில் விளையாடினர்.

நடுவரிசை குழப்பம்

நடுவரிசை குழப்பம்

பொதுவாக பயிற்சி ஆட்டத்தில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்கு தான் மெயின் போட்டியில் களமிறங்க வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வகையில், லெஸ்டர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. எனெனில் இந்தியாவின் பேட்டிங்கில் நடுவரிசையில் யாரை களமிறக்குவது என்ற குழப்பம் நிலவியது.

டக் அவுட்

டக் அவுட்

அந்த வகையில், ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் 20 ரன்களை கடந்தவுடன் ஆட்டமிழந்தனர். இதே போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஹாரி 3 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகியும் வெளியேறினர். விராட் கோலி சற்று தாக்குப் பிடித்து 33 ரன்கள் அடித்தார். ஆனால் இந்தியாவின் மானத்தை காப்பாற்றியது இந்திய அணியின் கூடுதல் விக்கெட் கீப்பராக களமிறங்கிய பரத் மட்டும் தான்.

கேஎஸ் பரம் அபாரம்

கேஎஸ் பரம் அபாரம்

இங்கிலாந்து பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்ட பரத் 111 பந்துகளை பிடித்து 70 ரன்களை விளாசினார். இதில் 8 பவுண்டரிகளும், ஒரு சிக்சர்களும் அடங்கும். நேற்றைய ஆட்டத்தில் பரத் மட்டும் தான் ஒரு அளவுக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் ஏற்கனவே உள்ளார்.

ரிஷப் பண்ட்க்கு ஆபத்து

ரிஷப் பண்ட்க்கு ஆபத்து

ஆனால் கடந்த சில போட்டிகளாக ரிஷப் பண்ட் பார்மில் இல்லாமல் உள்ளார். இதனால் பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே, முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. கேஎஸ் பரத்தின் அதிரடியால் தற்போது பண்ட்க்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. எனினும் ரிஷப் பண்ட்க்கு தான் முதல் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், பரத்துக்கு நடுவரிசையில் இடம் கிடைக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Friday, June 24, 2022, 16:25 [IST]
Other articles published on Jun 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+