Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு ரிவியூவை பார்த்திருக்கீங்களா ? களத்தில் தொடரும் தவறு.. இந்தியா செய்த மிகப் பெரிய சொதப்பல்

இந்தூர் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வீரர்கள் களத்தில் இரண்டு மிகப் பெரிய தவறு செய்தார்கள்.

டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியின் அபார பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் இந்திய அணி 109 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து தனது முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியும் 12 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

2வது வாய்ப்பு

2வது வாய்ப்பு

இதில் நடுவர் அவுட் தர மறுக்க, இந்தியா ரிவியூ எடுத்து வெற்றியை கண்டது. ஆனால், அதன் பிறகு நடந்த எந்த விசயங்களும் இந்தியாவுக்கு சாதகமாக நடைபெறவே இல்லை. இதனையடுத்து ஜடேஜாவின் நோ பாலில் மார்னஸ் லாபஸ்சேன் போல்ட் ஆகியது, ஆட்டத்தின் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் தமக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மார்னஸ் லாபஸ்சன் பொறுப்புடன் விளையாடி வருகிறார்.

டிஆர்எஸ் வாய்ப்பு

டிஆர்எஸ் வாய்ப்பு

இதே போன்று ஆட்டத்தின் 5.6வது ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் உஸ்மான் கவாஜா எல்பிடபிள்யூவுக்கு இந்தியா ரிவியூ கேட்டது. ஆனால் பந்து, நன்றாக திரும்பி ஸ்டம்பை மிஸ் செய்தது. இதை வெறும் கண்களால் பார்க்கும் போதே அவுட் இல்லை என தெரிந்தது. ஆனால், இந்தியா தேவையில்லாமல் ரிவியூ கேட்டு, ஒரு டிஆர்எஸ் வாய்ப்பை இழந்தது. இதன் பிறகு 9,6வது ஓவரில் கவாஜாவுக்கு மீண்டும் ஜடேஜா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ அப்பீலை இந்தியா கேட்டது.

2வது வாய்ப்பு வீண்

2வது வாய்ப்பு வீண்

ஆனால் அந்த பந்து ஸ்டம்பின் லைனிலேயே பந்து படவில்லை என்று கூறி, மூன்றாம் நடுவர் நிராகரித்தார். இதனால் இந்திய அணி 2 வாய்ப்பை தவறவிட்டது. இந்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் மார்னஸ் லாபஸ்சன் அடிக்க முயன்ற பந்து, அவர் காலில் பட்டது. ஆனால், அதற்கு நடுவர்கள் அவுட் தரவில்லை.

வீணான வாய்ப்பு

வீணான வாய்ப்பு

இதற்கு மீண்டும் டிஆர்எஸ் பயன்படுத்தலாமா என்று வீரர்கள் யோசித்தனர். கையில் இருக்கும் ஒன்றை வீணடித்துவிட வேண்டாம் என்று ரோகித் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால், அது ரீப்ளேவில் அவுட் என தெரிந்தது, இதனால் எடுக்க வேண்டிய நேரத்தில் டிஆர்எஸ் எடுக்காமல் இந்திய அணி தவறு செய்து, தற்போது சரிவை சந்தித்து வருகிறது.

Story first published: Wednesday, March 1, 2023, 15:42 [IST]
Other articles published on Mar 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+