Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

4- 5வது டி20 போட்டிகள் நடப்பதில் சிக்கல்.. “இதைக்கூட ஏற்பாடு செய்யலையா?”.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

செயிண்ட் கிட்ஸ்: போக்குவரத்து பிரச்சினைகள் காரணமாக இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 4 மற்றும் 5வது டி20 போட்டி நடைபெறுவதிலேயே சிக்கல் உருவாகியுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதுவரை நடைபெற்றுள்ள 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

டி20 கிரிக்கெட் தொடர்

டி20 கிரிக்கெட் தொடர்

முதல் டி20 போட்டி ட்ரினிடாட் தீவில் நடைபெற்ற சூழலில் 2வது மற்றும் 3வது டி20 போட்டிகள் செயிண்ட் கிட்ஸ் தீவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போக்குவரத்து பிரச்சினை ஏற்பட்டதால், 2வது டி20 போட்டியின் போது வீரர்களின் உடமைகள் சரியான நேரத்திற்கு வந்து சேரவில்லை. இதனால் போட்டியும் சுமார் 3 மணி நேரம் தாமதாக தொடங்கியது. இதற்கு ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வந்தனர்.

புதிய குழப்பம்

புதிய குழப்பம்

இந்நிலையில் தற்போது புது பிரச்சினை கிளம்பியுள்ளது. அதாவது இரு அணிகளும் மோதும் 4வது மற்றும் 5வது டி20 போட்டிகள் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் வரும் ஆகஸ்ட் 6 மற்றும் 7ம் தேதிகளில் நடைபெறவுள்ளன. ஆனால் அமெரிக்கா செல்வதற்காக வீரர்களுக்கு இன்னும் விசா கூட கிடைக்கவில்லை.

 என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

இரு அணிகளிலும் உள்ள ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே அமெரிக்கா செல்வதற்கான விசாக்கள் உள்ளன. மற்றவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் தான் இதற்கு பொறுப்பேற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். எனினும் பிசிசிஐ தாமாக முன்வந்து விசா ஏற்பாடுகளுக்கு உதவி வருகிறது.

மீண்டும் ட்ரினிடாட்

மீண்டும் ட்ரினிடாட்

முந்தைய திட்டத்தின் படி, இரு அணி வீரர்களும், செயிண்ட் கிட்ஸ் தீவில் இருந்து நேரடியாக ஃப்ளோரிடா செல்லவிருந்தனர். ஆனால் தற்போது அனைவரும் ட்ரினிடாட்டிற்கு திரும்ப சென்று, அங்கு விசா பணிகளை முடித்துவிட்டு, அதன்பின்னர்தான் தான் அமெரிக்க செல்ல வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஒருவேளை விசாப்பணிகள் சரியாக வரவில்லை எனும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் உள்ள ஏதேனும் மைதானத்தில் மீதமுள்ள 2 டி20 போட்டிகளும் நடத்தப்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

Story first published: Tuesday, August 2, 2022, 16:15 [IST]
Other articles published on Aug 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+