Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இலங்கையை சொந்த மண்ணிலேயே வென்றது இந்தியா... டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை!

பல்லகெலே: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 3 போட்டிகளிலும் இந்தியா வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் இந்தியா வென்றுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையின் பல்லகெலேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்தது இந்திய அணி. ஷிகர் தவன் 119, பாண்டிய 108, ராகுல் 85 ரன்கள் குவிக்க, 114.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்தது இந்திய அணி.

முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 37.4 ஓவர்களில் 135 ரன்களுக்குச் சுருண்டது. இதையடுத்து பாலோ-ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ரன்கள் எடுத்தது.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இலங்கை இன்னும் 333 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கியது. நேற்று மாலை வேளையில் சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின், கருணாரத்னேவை 16 ரன்களில் அவுட்டாக்கினார். இதனால் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணி தவித்தது.

270 ரன்கள் பிந்திய இலங்கை

270 ரன்கள் பிந்திய இலங்கை

அந்த அணி 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 270 ரன்கள் பின்தங்கியிருந்ததால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்று 3-0 எனத் தொடரை வெல்வது ஏறக்குறைய உறுதியானது. இலங்கை அணி சொந்த மண்ணில் பரிதாப தோல்வியடைந்தது.

கடைசி விக்கெட்

கடைசி விக்கெட்

கடைசி விக்கெட்டுக்காக இன்றைய நாளின் இரண்டாம் பகுதி நீட்டிக்கப்பட்டது. கடைசியில் குமாராவின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இன்னிங்ஸ் தோல்வியை அடைந்துள்ளது.

ஒயிட் வாஷ் தோல்வி

ஒயிட் வாஷ் தோல்வி

முதல் இரு போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, 3-ஆவது டெஸ்டிலும் வென்று இலங்கையை 'ஒயிட் வாஷ்' ஆக்கியுள்ளது. வெளிநாட்டு மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில் எதிரணியை 'ஒயிட் வாஷ்' ஆக்கிய முதல் இந்திய அணி என்ற பெருமை விராட் கோஹ்லி நிகழ்த்தியுள்ளார்.

85 ஆண்டுகால வரலாறு

85 ஆண்டுகால வரலாறு

85 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் எந்த அணியையும் 'ஒயிட் வாஷ்' ஆக்கியதில்லை. இதனை தற்போதைய விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சாதித்துள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Monday, August 14, 2017, 16:11 [IST]
Other articles published on Aug 14, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+