
அடுத்தடுத்து ஆட்டமிழப்பு
முகமது சிராஜ் மற்றும் அவேஷ் கான் ஆகியோரின் அனல் பறக்கும் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை வீரர்கள் தடுமாறி வருகின்றனர். முகமது சிராஜ், அவேஷ் கான் ஆகியோர் அபாரமாக பந்துவீச, இலங்கை அணி பவர் பிளேவில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சனாகா அதிரடி
இதே போன்று அசலங்கா, லியாங்கே, சந்திமாஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் சனாகா அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் விளாசினார். இறுதியில் சனாகா 38 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் இலங்கை அணி 68 ரன்கள் எடுத்தது.

ரோகித் சர்மா
147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார் தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 18 ரன்களில் வெளிறினார். தீபக் ஹுடாவுக்கு 4வது வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்தது. அவர் 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் 5 ரன்கள் அட்டமிழக்க, ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு தொற்றி கொண்டது.

ஸ்ரேயாஸ் அதிரடி
எனினும் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு முனையில் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவருக்கு ஜடேஜாவும் துணை நிற்க, இருவரும் பொறுப்புடன் விளையாடி 16 புள்ளி 5வது ஓவரில் இந்திய அணி இலக்கை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 12 சர்வதேச டி20 போட்டியில் வென்றுள்ள இந்திய அணி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான தொடரை முழமையாக வென்று அசத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











