For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடி தூள்.. தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி! டி20யில் நம்பர்-1 அணியானது இந்தியா.. சாதித்த ரோஹித் படை

கொல்கத்தா: வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை.

மூன்றாவது போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், அவேஷ் கான் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு ரோகித் சர்மா வாய்ப்பு வழங்கினார்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

தொடக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினார். ருத்துராஜ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஸ்ரேயாஸ் 16 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.இஷான் கிஷன் 31 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் களமிறங்கிய ரோகித் சர்மா 15 பந்துகளை எதிர்கொண்ட 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனையடுத்து இந்திய அணி 93 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

சூரியா அதிரடி

சூரியா அதிரடி

இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக சூரியகுமார் குமார் யாதவ் தனது டிரெட் மார்க் ஷாட் மூலும் சிக்சர்களை பறக்கவிட்டார். 27 பந்துகளில் அவர் அரைசதம் விளாசினார்.மறுமுனையில் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி சூரியாவுக்கு நல்ல ஆதரவு வழங்கினார். இந்த ஜோடி கடைசி 5 ஓவரில் 86 ரன்கள் விளாசியது. சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இதில் 7 சிக்சர்கள் அட்ங்கும். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் குவித்தது.

மீண்டும் ஏமாற்றம்

மீண்டும் ஏமாற்றம்

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர் கெயில் மெயர்ஸ், 6 ரன்களிலும், ஹோப்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய பொவேல் 14 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஹர்சல் பட்டேல் பந்துவீச்சில் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொலார்ட், ஹோல்டர் ஆகியோரும் அடுத்தடுத்து ஏமாற்றினர்.

நிக்கோலஸ் பூரான்

நிக்கோலஸ் பூரான்

ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரான், அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவருக்கு ரோமேனிய செஃபர்டும் உறுதுணையாக நின்று அதிரடியை காட்ட ஆட்டத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. எனினும் நிக்கோலஸ் பூரான் 61 ரன்கள் எடுத்திருந்த போது ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் தூக்கி அடித்து கேட்ச் ஆனார்.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

கடைசி 2 ஓவரில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்ட போது, ஹர்சல் பட்டேல், தனது அனுபவ பந்துவீச்சு மூலம் செஃபர்ட் விக்கெட்டை காலி செய்தார். அந்த ஓவரில் 9 ரன்கள் மட்டுமே ஹர்சல் விட்டு கொடுக்க, கடைசி ஓவரில் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷர்துல் தாக்கூர் 5 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம், இந்திய அணி டி20 போட்டியில் தொடர்ந்து 9 ஆட்டங்களில் வென்று, சர்வதேச டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது

Story first published: Sunday, February 20, 2022, 23:43 [IST]
Other articles published on Feb 20, 2022
English summary
India Whitewashes West indies 3-0 and Ranked no1 t20 team in world உலகின் நம்பர் 1 அணி ஆனது இந்தியா.. தொடர்ந்து 9 போட்டியில் வெற்றி.. தொடரை முழுமையாக வென்றது இந்தியா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+