Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆகஸ்ட்டுல இங்கிலாந்து போகுது இந்திய அணி... இந்தியா ஏ அணியோட பயிற்சி ஆட்டத்துல விளையாடறாங்க!

டெல்லி : இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3 வடிவங்களிலான போட்டித் தொடர்கள் நடைபெறவுள்ளன.

இதையடுத்து வரும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

முன்னதாக இந்தியா ஏ அணியுடன் 2 பயிற்சி ஆட்டங்களிலும் இந்திய அணி விளையாட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

3 வடிவங்களில் போட்டிகள்

3 வடிவங்களில் போட்டிகள்

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3 வடிவங்களிலான போட்டித் தொடர்கள் வரும் 5ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் தொடர்ந்து டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களும் நடைபெறவுள்ளன. இதையொட்டி இந்தியா வந்துள்ள இங்கிலாந்து வீரர்கள் குவாரன்டைனில் ஈடுபட்டுள்ளனர்.

ஜூலையில் இந்திய அணி பயணம்

ஜூலையில் இந்திய அணி பயணம்

இதையடுத்து வரும் ஜூலை மாதத்தில் இங்கிலாந்தில் இந்திய அணியினர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர். 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன. இதன் முதல் போட்டி வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நாட்டிங்காமில் துவங்கி நடைபெறவுள்ளது.

லண்டனில் 2 போட்டிகள்

லண்டனில் 2 போட்டிகள்

ஆகஸ்ட் துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் இந்த 5 டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. முதல் போட்டி நாட்டிங்காமில் ஆகஸ்ட் 4ம் தேதி துவங்கி நடைபெறவுள்ளது. லண்டனில் 2வது மற்றும் 4வது போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், 3வது மற்றும் 5வது டெஸ்ட் போட்டிகள் லீட்ஸ் மற்றும் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளன.

2 பயிற்சி ஆட்டங்களுக்கு திட்டம்

2 பயிற்சி ஆட்டங்களுக்கு திட்டம்

இந்த போட்டிகளுக்கு முன்னதாக ஜூலை மாதத்தில் 2 பயிற்சி ஆட்டங்களை இந்தியா ஏ அணியுடன் இந்திய அணி இங்கிலாந்திலேயே விளையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த போட்டிகள் வரும் ஜூலை 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் துவங்கி நடைபெறவுள்ளன. இதற்கென இந்திய அணியுடன் இந்தியா ஏ அணியும் இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளவுள்ளது.

Story first published: Thursday, January 28, 2021, 14:24 [IST]
Other articles published on Jan 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+