For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானுக்கு எதிரான பிளெயிங் லெவன்..தீர்மானிக்கபோகும் ஆட்டம்..இந்தியா-இங்கிலாந்து வார்ம்அப் மேட்ச்

துபாய்: ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா முடிந்த கையோடு சர்வதேச டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றிகரமாக தொடங்கி விட்டது. ஐ.பி.எல் தொடரில் தனித்தனி அணியாக பங்கேற்ற இந்திய அணி வீரர்கள், உலகக்கோப்பையை கைப்பற்ற ஒரே அணியாக ஒன்று சேர்ந்து விட்டனர்.

டி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமாடி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமா

டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை முதல் ஆட்டத்தில் இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. வரும் 24-ம் தேதி அனல் பறக்கும் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

வார்ம் அப் மேட்ச்

வார்ம் அப் மேட்ச்

இதற்கு முன்னதாக இந்தியா இரண்டு வார்ம் அப் மேட்சில்(பயிற்சி ஆட்டத்தில்) விளையாட இருக்கிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுடன் மோத இருக்கிறது. முதல் வார்ம் அப் மேட்சில் இங்கிலாந்துடன் இந்தியா இன்று மோத இருக்கிறது. இன்றைய வார்ம் அப் மேட்ச் இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகவும். ஏனென்றால் பாகிஸ்தானுக்கு எதிரான பிளெய்ங் லெவனை தேர்வு செய்வதற்கு இந்த வார்ம் அப் மேட்ச் உதவியாக இருக்கும்.

ஹார்திக் பாண்ட்யா பார்ம்

ஹார்திக் பாண்ட்யா பார்ம்

இந்தியாவை பொறுத்தவரை ஒப்பனர்களாக ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் களமிறங்குவார்கள். மிடில் ஆர்டரில் கேப்டன் விராட் கோலியுடன், சூர்யகுமார் இறங்கலாம். ஹார்திக் பாண்ட்யா மோசமான பார்மில் உள்ளதால், இன்றைய பயிற்சி ஆட்டத்தில் அவர் களமிறக்கப்பட்டு சோதிக்கப்படலாம். இதேபோல் கடைசி நேரத்தில் அக்ஷர் படேலுக்கு பதிலாக அணியில் இடம் பெற்ற ஷர்துல் தாக்கூருக்கு முன்கூட்டியே இறங்க வாய்ப்பு கொடுக்கப்படும்.

Recommended Video

ICC T20 World Cup- Virat Kohli Has His Say On Ind Vs Pak Cricket Rivalry | Oneindia Tamil
உதவிகரமாக இருக்கும்

உதவிகரமாக இருக்கும்

பவுலிங்கை பொறுத்தவரை நீண்டநாளுக்கு பிறகு அணியில் இடம்பெற்ற புவனேஷ்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு பரிசோதிக்கப்படலாம். சாஹாலுக்கு பதிலாக அணியில் கொண்டு வரப்பட்ட ராகுல் சாஹர் பவுலிங் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்தை பொறுத்தவரை கேப்டன் மோர்கனை தவிர அனைவரும் சிறப்பான பார்மில் உள்ளனர். முக்கியமான ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து மோத வாய்ப்பு இருப்பதால், இன்றைய பயிற்சி ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

பிளெயிங் லெவன் இதுதான்

பிளெயிங் லெவன் இதுதான்

பயிற்சி ஆட்டத்தில் ஆடும் பிளெயிங் லெவன்:-

இந்தியா:- விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ராகுல் சஹார்

இங்கிலாந்து:- இயோன் மோர்கன்(கேப்டன்), ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர், ஜானி பேர்ர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி, கிறிஸ் ஜோர்டான், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித்

Story first published: Monday, October 18, 2021, 15:07 [IST]
Other articles published on Oct 18, 2021
English summary
India will face England today in the first warm-up match. Today's warm-up match is very important for India. Because this warm up match will help to select the playing eleven against Pakistan
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X