Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த முறை ஜெயிக்காட்டி, ஆஸி. மண்ணில் இனி எப்போதும் இந்தியா ஜெயிக்க முடியாது.. ஏன்?

சிட்னி : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலிய அணி தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த அணியில் அனுபவ வீரர்கள் மிக குறைவாகவே உள்ளனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்த முறை டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றவில்லை என்றால் இனி எந்த காலத்திலும் அது நடக்காது என கூறியுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ்.

டீன் ஜோன்ஸ் கருத்து

டீன் ஜோன்ஸ் கருத்து

டீன் ஜோன்ஸ் கூறுகையில், "இந்த தொடரை இந்தியா வெல்லவில்லை என்றால், அவர்கள் ஆஸ்திரேலியாவில் (டெஸ்ட் தொடரை) வெல்லவே முடியாது. தற்போது அனைத்து வித கிரிக்கெட்டிலும் இந்தியா ஆஸ்திரேலியாவை விட பல மைல் தூரம் முன்னே இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு நம்பிக்கையும், வேகப் பந்துவீச்சாளர்களிடம் திறனும் இருக்கிறதா?" என தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி பரிதாபம்

ஆஸ்திரேலிய அணி பரிதாபம்

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத ஆஸ்திரேலிய அணி மிகவும் பரிதாபமாக கிரிக்கெட் ஆடி வருகிறது. கடந்த சில மாதங்களாக ஒன்று, இரண்டு போட்டிகள் தவிர பெரிய வெற்றிகள் எதுவும் பெறவில்லை. ஆனால், இந்தியா பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. ஆனால், இங்கிலாந்து, தென்னாபிரிக்காவில் மட்டும் இந்தியா தடுமாறி இருந்தது. அணித் தேர்விலும் சில குழப்பம் இருக்கிறது.

பல மடங்கு மேலே இந்தியா

பல மடங்கு மேலே இந்தியா

ஆனால், ஆஸ்திரேலிய அணியோடு ஒப்பிட்டால் இந்தியா பல மடங்கு மேலே இருக்கிறது. இந்தியா இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்த குறையை போக்க தற்போது நடக்கவுள்ள டெஸ்ட் தொடர் தான் சரியான வாய்ப்பு.

பலமான முந்தைய அணிகள்

பலமான முந்தைய அணிகள்

அதே சமயத்தில், ஆஸ்திரேலிய அணியும் தற்போது மிக பலவீனமாக இருக்கிறது. கடந்த இருபது வருடங்களில் இந்திய அணி ஆஸ்திரேலியா வந்த போது ஸ்டீவ் வாஹ், ரிக்கி பாண்டிங், மைக்கேல் கிளார்க், ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அணிகள் இருந்தன. அவை இந்தியாவில் எத்தனை பெரிய ஜாம்பவான் இருந்தாலும் அதை சமாளிக்கும் திறன் பெற்று இருந்தன. ஆனால், தற்போதுள்ள அணியில் அத்தகைய திறன் இல்லை.

நல்ல வாய்ப்பு

நல்ல வாய்ப்பு

ஒரு வேளை இந்தியா இப்போது டெஸ்ட் தொடரில் வெற்றி பெறவில்லை என்றால், இனி சில ஆண்டுகள் கழித்து தான் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் ஆடும். அதற்குள் ஆஸ்திரேலிய அணி மீண்டு விட அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்தியா ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதன் முறையாக வெல்ல இதுவே நல்ல வாய்ப்பு.

Story first published: Saturday, December 1, 2018, 19:07 [IST]
Other articles published on Dec 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+