
5வது இடத்தில் இங்கிலாந்து
ஆக மொத்தத்தில் எஞ்சிய 2 போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலக கோப்பையை மோசமாக தொடங்கிய பாகிஸ்தான், தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்று 4ம் இடத்திற்கு முன்னேறியதால், இங்கிலாந்து 5ம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது.

மாஸ் காட்டும் இந்தியா
அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க கண்டிப்பாக வெற்றி அவசியம். எனவே, , இதுவரை தோல்வியையே தழுவாத இந்திய அணியை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. உலக கோப்பை தொடரின் முக்கிய போட்டி என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

11 பேர்கொண்ட அணி
எக்பாஸ்டன் மைதானத்தில் போட்டி நடக்கவுள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே 11 பேர் கொண்ட அணி தான் ஆடும். புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக அணியில் இணைந்த ஷமி, தாம் ஆடிய 2 போட்டிகளிலுமே தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, நல்ல எக்னாமி ரேட்டும் வைத்துள்ளார். எனவே அவர் இன்றைய போட்டியிலும் ஆடுவார்.

மாற்ற மறுத்த கோலி
அதேபோல 4ம் வரிசையிலும் மாற்றம் இருக்க போவதில்லை. அவ்வளவாக சோபிக்காத விஜய் சங்கரை நீக்கிவிட்டு ரிஷப் பன்ட்டை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் ஒலித்தன. ஆனால், விஜய் சங்கர் தான் ஆடுவார் என்பதை கோலி சூசகமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்.

வாய்ப்பே கிடையாது
எனவே விஜய் சங்கர் கண்டிப்பாக இந்த போட்டியில் ஆடுவார். மற்றபடி கேதர், குல்தீப், சாஹல் ஆகியோர் மாற்றப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. ஒட்டு மொத்தத்தில் கடந்த போட்டியில் இருந்த அதே வெற்றி கூட்டணியே இன்றைய முக்கிய போட்டியிலும் களம் காணும் என்று சொல்லலாம்.

அணியில் யார்? யார்?
11 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி: ரோகித் சர்மா, ராகுல், கோலி(கேப்டன்), விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஷமி, சாஹல், பும்ரா.


Click it and Unblock the Notifications