Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று இந்தியா, ஆப்கன் போட்டி.. ஏன் ஆப்கனிடம் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்?

Recommended Video

ஏன் ஆப்கனிடம் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்?

துபாய் : ஆசிய கோப்பை தொடரில் இரண்டாம் சுற்றான சூப்பர் 4 இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

இன்று இந்தியா, ஆப்கானிஸ்தான் அணியோடு மோதுகிறது. ஏற்கனவே, இந்தியா இறுதிக்கு முன்னேறி விட்டது. ஆப்கானிஸ்தான் அணியோ இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது.

இன்றைய இந்தியா ஆப்கானிஸ்தான் போட்டி முடிவு இரண்டு அணிகளையுமே பாதிக்காது. எனினும், இந்தியா இன்றைய போட்டியில் வெல்ல வேண்டும். ஆப்கன் அணியை எளிதாக நினைத்து விடவும் கூடாது.

இந்தியா பெற்ற வெற்றிகள்

இந்தியா பெற்ற வெற்றிகள்

இந்தியா ஆசிய கோப்பை முதல் போட்டியில் கத்துக்குட்டி ஹாங்காங் அணியிடம் தடுமாறி தான் வென்றது. எனினும், அடுத்த போட்டிகளில் இரண்டு முறை பாகிஸ்தான், ஒரு முறை வங்கதேசம் அணியை மிக எளிதாக வீழ்த்தியதால் மனதளவில் நம்பிக்கையுடன் உள்ளது இந்திய அணி.

ஆப்கானிஸ்தான் செயல்பாடுகள்

ஆப்கானிஸ்தான் செயல்பாடுகள்

ஆப்கானிஸ்தான் இந்த தொடரில் மிக அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்திய அணி. குரூப் சுற்றில் இலங்கை, வங்கதேச அணிகளை வீழ்த்தியது. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டு அணிகளையும் கதற விட்டு, கடைசி ஓவரில் தான் தோல்வியை தழுவியது.

இந்தியா கவனமாக இருக்கணும்

இந்தியா கவனமாக இருக்கணும்

இன்றைய போட்டியில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். காரணம், ஆப்கானிஸ்தான் சுழல் பந்துவீச்சில் திறன் வாய்ந்த அணியாக இருக்கிறது. ரஷித் கான் உள்ளிட்ட சுழல் பந்துவீச்சாளர்கள் பந்துகளில் ரன் குவிக்க சிரமமாக உள்ளது. அடுத்து இறுதிப் போட்டி உள்ள நிலையில், இந்தியா ஒரு வேளை தோல்வி அல்லது கடைசி ஓவர் வெற்றியை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பெற்றால், அது மனதளவில் இந்தியாவை சோர்ந்து போக செய்துவிடும்.

முழு பலத்துடன் இந்தியா

முழு பலத்துடன் இந்தியா

இன்று இந்தியா தன் சிறந்த அணியோடு முழு பலத்துடன் இறங்கி எளிதான வெற்றியை பெற வேண்டும். அப்போதுதான் இறுதிப் போட்டிக்கு செல்லும் முன்னர் நம்பிக்கையுடன் இருக்க முடியும். அணியில் பெரிய மாற்றம் செய்யாமல் இருக்குமா இந்தியா?

Story first published: Tuesday, September 25, 2018, 10:47 [IST]
Other articles published on Sep 25, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+