அரை இறுதி வரை போய் விடலாம், அதன் பிறகு விதிப்படி நடக்கும்... ஷேவாக்!
டெல்லி: உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதி வரை நிச்சயம் முன்னேறும் என கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் ஷேவாக்குக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனபோதும், எங்கே இவர்கள் ஜெயிக்கப் போகிறார்கள் என்று சாபம் விடாமல், இந்திய அணியில் திறமையான வீரர்கள் இருப்பதாகவும், எனவே உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறும் என்று நல்லதாக நாலு வார்த்தை கூறியுள்ளார்.
மேலும், இந்தியா தவிர ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கும் அரையிறுதி செல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக அவர் கூறினார்.

பார்மில் இல்லாத காரணத்தால்
ஷேவாக் தற்போது பார்மில் இல்லை என்ற காரணத்தைக் காட்டி அணியில் சேர்க்கப்படவில்லை. இருப்பினும் இந்தியா மீது அவர் அபார நம்பிக்கை வைத்துள்ளார்.

சமீபத்திய தோல்விகள் பாதிக்காது
ஷேவாக் கூறுகையில் சமீபத்தில் தோல்விகள் உலகக் கோப்பைப் போட்டியின்போது இந்தியாவைப் பாதிக்காது என்றே கருதுகிறேன்.

அரை இறுதி வரை வரலாம்
அரை இறுதிக்கு இந்தியா நிச்சயம் வரும். அதில் நாம் எப்படி விளையாடுகிறோமோ அதற்கேற்ப இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

இந்தியா மட்டுமல்ல
இந்தியா மட்டுமலல்லாமல் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கும் அரை இறுதிக்குள் வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

முழுமையாக விளையாட வேண்டும்
சமீபத்திய தோல்விகள் இந்தியாவைப் பாதிக்காது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு வீரரும் 100 சதவீத அர்ப்பணிப்புடன் ஆட வேண்டும். அப்படி விளையாடினால் நிச்சயம் வெற்றியைப் பெறலாம் என்றார் ஷேவாக்.

தொடர் தோல்விகள்
இந்தியா, ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட் தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. பின்னர் முத்தரப்பு தொடரில் ஒரு வெற்றி கூட பெறவில்லை.

நம்பிக்கை உள்ளது
இந்திய அணி வீரர்களின் பிரச்சினைக்கு என்னால் எந்தத் தீர்வு கூற முடியும் என்று தெரியவில்லை. நிச்சயம் அவர்களே உணர்ந்திருப்பார்கள். எனவே அனைவரும் கடினமாக பாடுபட்டு, தவறுகளைக் களைந்து முழுமையாக ஆடும்போது நிச்சயம் வெற்றி பெற முடியும் என்று நம்புகிறேன் என்றார் ஷேவாக்.


Click it and Unblock the Notifications