Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது தான் இந்திய அணியின் புது ‘ஜெர்சி’… காவி கலரை பாருங்க.. என்னமோ தோணுதா?

Recommended Video

Icc World Cup 2019: காவி கலரை பாருங்க.. இந்திய அணியின் புது ‘ஜெர்சி' இது தான்- வீடியோ

லண்டன்: உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஆரஞ்சு நிற ஜெர்சியில் களமிறங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக கோப்பை தொடரில் இந்தியா இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றுள்ளது. 7 புள்ளிகளுடன் பட்டியலில் 4 வது இடத்தில் இருக்கிது. டிரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

உலகமே எதிர்பார்த்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக கோப்பையில் தொடர்ந்து 7வது முறையாக பாகிஸ்தனை வென்று இந்தியா சாதனை படைத்தது. அந்த போட்டியில் பவுலர் புவனேஸ்வர்குமாருக்கு காயம் ஏற்பட்டது.

வீரர்கள் காயம்

வீரர்கள் காயம்

எனவே, இனிவரும் சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார். காயத்தால் தவானும் தொடரில் இருந்து வெளியேறி விட்டார். இவ்விரு நிகழ்வுகளும், இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், நெருக்கடியையும் தந்திருக்கிறது.

ஆரஞ்சு ஜெர்சி

ஆரஞ்சு ஜெர்சி

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டியின் போது இந்திய அணி வழக்கமான ஜெர்சியில் களமிறங்கப் போவதில்லை. மாறாக, ஆரஞ்சு நிற ஜெர்சியில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இரு அணிகளுக்கும் போட்டிக்கான பிரதான உடை நீல நிறத்தில் இருக்கும்.

ஐசிசி விதிமுறை

ஐசிசி விதிமுறை

ஆனால் ஐசிசியின் புதிய விதிமுறைப்படி மோதும் இரு அணிகளும் ஒரே நிற உடையில் களம் இறங்க முடியாது. அதனால் ஏதேனும் ஒரு அணி மாற்று நிற உடையில் களமிறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது.

உடையில் மாற்றம்

உடையில் மாற்றம்

போட்டியை நடத்தும் நாடான இங்கிலாந்து எவ்வித மாற்றமும் செய்து கொள்ள வேண்டாம். ஆனால், இந்தியா தங்களது உடையில் மாற்றம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக இந்திய அணியின் உடையில் பிரதானமாக காவி நிறம் இருக்கப் போவதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன.

அறிவிப்பு எப்போது?

அறிவிப்பு எப்போது?

எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு வெளியாகும் என தெரிகிறது. ஆக, இந்திய கிரிக்கெட் வீரர்களின் புதிய உடையை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர். இதுவரை இந்திய அணிக்கு 24 முறை உடை மாற்றப்பட்டுள்ளது. அந்த உடைகளில் நீல நிறமே அதிகமாக இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, June 21, 2019, 12:32 [IST]
Other articles published on Jun 21, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+