Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையை இந்திய அணி தான் வெல்லும்.. காரணத்துடன் சொன்ன கங்குலி

மும்பை: 2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் ஹாங்காங் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கிறது.

இதில் இந்திய அணி, ஓமன், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுடன் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்திருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போர் பதற்றத்திற்கு பிறகு இரு அணிகளும் முதல் முறையாக மீண்டும் மோதுகிறது.

sourav Ganguly om asia cup

இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தானுடன் அதிகபட்சமாக மூன்று முறை மோத வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணி தான் வெற்றி பெறும் என முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஐபிஎல் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் பிறகு தற்போது இந்திய அணி வீரர்கள் ஓய்வில் இருக்கின்றனர்.

அதன்பின் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது. எனவே இந்த ஓய்வு இந்திய வீரர்களுக்கு பல நல்லதை தரும். இந்திய அணி தான் இருப்பதிலேயே அந்த தொடரில் பலமாக இருக்கின்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நமது அணி பலமாக இருக்கிறது என்றால் வெள்ளை நிற கிரிக்கெட்டில் இன்னும் பலமாக இருக்கிறது.என்னை பொறுத்தவரை இம்முறை இந்தியா தான் ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

துபாயில் உள்ள ஆடுகளங்களில் இந்தியாவை வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கும் என்று கங்குலி தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற வேண்டுமா என்று கேள்விக்கு இருவரும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ரெக்கார்டுகள் வைத்திருக்கின்றனர்.

இருவரும் தொடர்ந்து நன்றாக விளையாடினால் அவர்களுக்கு வாய்ப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் என்றும் கங்குலி கூறினார். இதேபோன்று இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சிற்பங்கள் தனது பணியை சிறப்பாக செயல்பட்டு இருப்பதாகவும் எதிர்காலத்தில் ரசிகர்களின் நம்பிக்கையை சுமந்து செல்லும் கேப்டனாக அவர் விளங்குகிறார் என்றும் கங்குலி பாராட்டியுள்ளார்.

Story first published: Sunday, August 10, 2025, 18:44 [IST]
Other articles published on Aug 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+