ஹைதராபாத்-ல இந்தியா தோத்துகிட்டே இருந்துச்சு.. இப்ப ஜெயிச்சுகிட்டே இருக்கு.. எப்படி?
ஹைதராபாத் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவல் தெரிய வந்துள்ளது.
இந்த மைதானம் அமைக்கப்பட்ட சில ஆண்டுகளாக நடந்த போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்து வந்துள்ளது.
அதனையடுத்து, செய்த சில மாற்றங்களால் தற்போது இந்தியா வெற்றி பெற்று வருவதாக கூறப்படுகிறது. அப்படி என்ன மாற்றம் செய்தார்கள்?

தொடர்ந்த தோல்விகள்
கிரிக்கெட் விளையாட்டில் சில அதீத நம்பிக்கைகள் எப்போதும் உண்டு. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் துவக்க காலம் முதல் 2010 வரை, இந்தியா மற்றும் இதனை சொந்த மைதானமாக கொண்ட ஐபிஎல்-இன் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தன.

வாஸ்து தான் காரணம்
இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்து வாஸ்து கோளாறு தான் காரணம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் இதன் நிர்வாகிகள். அதை சரி செய்ய 2011இல் ஒரு பிள்ளையார் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின் அங்கே இந்தியா ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் தோல்விகள்
இங்கு 2005இல் முதல் சர்வதேச போட்டி நடைபெற்றுள்ளது. அதில் இந்தியா, தென்னாபிரிக்கா அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. அடுத்து 2007 மற்றும் 2009இல் ஆஸ்திரேலியா அணியிடம் இருமுறை தோல்வி அடைந்துள்ளது. 2010இல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் டிரா மட்டுமே செய்துள்ளது இந்தியா.

அனைத்திலும் வெற்றி
இந்த கோயில் வந்த பின் ஆடிய அனைத்து போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 2012 முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் இங்கே வெற்றிகளை குவித்துள்ளது இந்திய அணி. அதே போல 2011 மற்றும் 2014இல் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் வெற்றி வாகை சூடி உள்ளது இந்தியா. இங்கே இந்தியா ஆடும் போட்டிகள் நடைபெற்றால், தோனி தவறாமல் இந்த கோயிலுக்கு வந்து செல்வார் என குறிப்பிடுகிறார்கள்.
இதெல்லாம் நம்பலாமா.. வேண்டாமா? ஒரே குழப்பமா இருக்கே..


Click it and Unblock the Notifications