உலக கோப்பை டி20: இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் 18 ஓவராக குறைப்பு !
கொல்கத்தா: பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி போட்டி நடக்கிறது.

மழை பெய்ததால் போட்டி 1 மணி நேரம் தாமதமாக துவங்கியது. மழை காரணமாக ஆட்டம் 18 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி பீல்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
இந்த போட்டியை காண இரு நாட்டு ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தோடு உள்ளனர். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று, நாடு முழுவதும் ரசிகர்கர்கள் பிரார்த்தனை செய்தனர்.
Story first published: Saturday, March 19, 2016, 20:43 [IST]
Other articles published on Mar 19, 2016


Click it and Unblock the Notifications