
ஓராண்டில் ஏழாவது தொடர் வெற்றி
இதன் மூலம், தொடர்ந்து, ஏழு ஒருதினப் போட்டித் தொடர்களில் வென்று புதிய சாதனையை இந்தியா படைத்துள்ளது கடந்த ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா 4-1 என்ற கணக்கில் ஒருதினப் போட்டித் தொடரை இழந்தது. அதன்பிறகு நடந்த அனைத்து தொடர்களிலும் ஜெயம் நமக்கே. உள்நாட்டில், 2015ல் தென்னாப்பிரிக்காவிடம் 3-2 என்று இந்தியா தோல்வியடைந்தது. அதன்பிறகு, தொடரை இழந்ததில்லை.

ஓராண்டில் நியூசியுடன் இரண்டாவது வெற்றி
கடந்த ஆண்டில் துவங்கி இதுவரை 6 ஒருதினப் போட்டித் தொடர்களில் இந்தியா தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3-0 என்ற கணக்கிலும், அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணியை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது. அதன் பிறகு, இங்கிலாந்து அணியை 2-1 என்றும், வெஸ்ட் இன்டீஸ் அணியை 3-1 என்றும் இந்தியா வென்றது. இலங்கை 5-0 என ஒயிட்வாஷ் செய்த அணி, உள்நாட்டில் நடந்த தொடரில் ஆஸ்திரேலியாவை 4-1 என்று வென்றது.

உள்நாட்டிலும் வெற்றி தொடர்கிறது
அதன் தொடர்ச்சியாக, தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணியை 2-1 என வென்று, தொடர்ந்து ஏழு தொடர் வெற்றிகளைப் பெற்றுள்ள சாதனையை இந்தியா புரிந்துள்ளது. இதற்கு முன், 2006 - 07 மற்றும் 2007 - 2009ல் தொடர்ந்து 6 தொடர்களில் தொடர்ச்சியாக வென்றதே சாதனையாக இருந்தது. உள்நாட்டில் கடந்த ஆண்டு நியூசிலாந்து அணியை 3-2 என வென்றது. அதன் பிறகு இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியாவை 4-1 என்றும் இந்தியா வென்றது.

நியூசிக்கு எதிராக உள்நாட்டில் தோற்றதில்லை
தற்போது 2-1 என்று நியூசிலாந்தை மீண்டும் வென்றது. உள்நாட்டில் நியூசிலாந்து எதிராக நடந்த 6 தொடர்களில் இந்திய அணி வென்றுள்ளது. அடுத்தாக, இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வர உள்ளது. டிசம்பர் 10, 13, 17ல் மூன்று ஒருதினப் போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியாவின் வெற்றிப் பயணம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











