அஸ்வின், அக்சரின் பக்கா பதிலடி.. இங்கிலாந்தை அடித்து துவம்சம் செய்த இந்திய அணி.. மாபெரும் வெற்றி!
சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி இரண்டாவது டெஸ்டில் அடிப்பட்ட புலியாக இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, ரஹானே, பண்ட், சிராஜ், இஷாந்த் சர்மா, அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் ஆகியோர் ஆடினார்கள்.

ரோஹித் அதிரடி
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. சென்னையில் பேட்டிங் இறங்கிய கில், புஜாரா, கோலி சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். ஆனால் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 161 ரன்கள் எடுத்தார். ரஹானே அதிரடியாக 67 ரன்கள் எடுத்தார்.

பண்ட்
அதோடு பண்ட் அதிரடியாக 58 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 10 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்தது. இதன்பின் இறங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அஸ்வின் அதிரடியாக பந்து வீசி 48 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் எடுத்தார்.

இங்கிலாந்து
இதனால் இங்கிலாந்து அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் இறங்கிய இந்திய அணி அதிரடியாக தொடங்கினாலும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. புஜாரா, கில், ரோஹித் , பண்ட், ரஹானே அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

அவுட்
இந்த நிலையில் அஸ்வின், கோலி அதிரடியாக ஆடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். அஸ்வின் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். கோலி அதிரடியாக அரைசதம் அடித்தார். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 286 ரன்கள் எடுத்து இங்கிலாந்துக்கு 482 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது.

நேற்று
நேற்று இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய இங்கிலாந்து அணி வரிசையாக 3 விக்கெட்டுகளை இழந்தது.இன்றும் காலையிலிருந்து இந்திய அணியின் சூழலில் இங்கிலாந்து அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அக்சர் பட்டேல் 5 விக்கெட், அஸ்வின் 3 விக்கெட், குல்தீப் யாதவ் 2 விக்கெட் எடுத்தனர்.

சமநிலை
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை இந்தியா வீழ்த்தி உள்ளது. இதனால் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications