Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி தட்டிய இந்திய அணி.. அசர வைக்கும் "ஸ்பின்" வெற்றி!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக ஆடி விக்கெட் இழப்பின்றி வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது.

இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்தது. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

எப்படி

எப்படி

இரவு பகல் ஆட்டமாக இந்த போட்டி நடைபெற்றது. உலகின் பெரிய மோதேரா மைதானத்தில் பிங்க் பால் மூலம் இந்த போட்டி நடந்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆடும் இந்திய அணியில் கோலி, ரோஹித், கில், புஜாரா, ரஹானே, பண்ட், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் களமிறங்கினார்கள்.

முதல் இன்னிங்ஸ்

முதல் இன்னிங்ஸ்

இதில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்தாலும் தொடக்கத்தில் இருந்து திணறியது. இந்திய அணியின் ஸ்பின் அட்டாக்கை தாங்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் அக்சர் பட்டேல் சிறப்பாக பவுலிங் செய்து 5 விக்கெட் எடுத்தார். இங்கிலாந்து அணியில் கிரவுலி மட்டும் 53 ரன்கள் எடுத்தார்.

அவுட்

அவுட்

இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களுக்கு அவுட் ஆனது. இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணியும் தொடர்ந்து தடுமாறியது. ரோஹித் மட்டும் ஒரு பக்கம் அதிரடியாக 66 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் எல்லோரும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தனர்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

அனைத்து விக்கெட்டையும் இழந்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி இங்கிலாந்தை விட 33 ரன்கள் கூடுதலாக எடுத்தது. சிறப்பாக பவுலிங் செய்த இங்கிலாந்து கேப்டன் ரூட் 5 விக்கெட் எடுத்தார். ரஹானே ஒரு ரன்னுக்கும், அக்சர், பண்ட், சுந்தர் ஆகியோர் டக் அவுட்டும் ஆனார்கள். அஸ்வினும் 17 ரன்களுக்கு அவுட் ஆனார்

இங்கிலாந்து காலி

இங்கிலாந்து காலி

அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரிலேயே அக்சரிடம் இரண்டு விக்கெட்டை பறிகொடுத்தது. அதன்பின் இங்கிலாந்து அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பவுலிங் செய்த அக்சர் மீண்டும் 5 விக்கெட், அஸ்வின் 4 விக்கெட் எடுத்தனர்.

வெற்றி

வெற்றி

இதையடுத்து இந்திய அணிக்கு 49 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸ் களமிறங்கிய ரோஹித், கில் இருவரும் டென்சன் இன்றி ஆடி எளிதாக 49 ரன்களை எடுத்தனர். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி வெற்றிபெறுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்று இந்தியா முன்னிலை வகிக்கிறது.

Story first published: Thursday, February 25, 2021, 23:18 [IST]
Other articles published on Feb 25, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+