IND W vs SL W: டி20 தொடரை வென்றது இந்திய மகளிர் அணி.. ஷாபாலி வர்மா மீண்டும் அதிரடி.. இலங்கை தோல்வி
திருவனந்தபுரம்: இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி அபார வெற்றிகள் பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பிறகு முதல் முறையாக கிரிக்கெட் களத்திற்கு திரும்பி இருக்கிறது.
50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற நிலையில் தற்போது 2026 ஜூன் மாதம் மகளிர் டி20 உலக கோப்பை நடைபெற இருக்கிறது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் களமிறங்குகிறது.

இலங்கைக்கு எதிரான ஐந்து டி20 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 மற்றும் மகளிர் பிரிமியர் லீக் ஆண்டுக்கு எதிரான டி20 தொடர் என பல போட்டிகள் எஞ்சி இருக்கிறது. இந்த சூழலில் இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியாவில் வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது டி20 போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து களமிறங்கிய இலங்கை மகளிர் அணியில் ஹாசினி 25 ரன்களும், இம்மிஷா துலானி 27 ரன்களும், கவிஷா தில்ஹாரி 20 ரன்கள் எடுக்க இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணியின் பந்துவீச்சில் ரேணுகா சிங் நான்கு விக்கெட்டுகளையும் தீப்தி சர்மா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதனை அடுத்து 113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆட்டம் இழக்க ஜெமிமா ஒன்பது ரன்களில் வெளியேறினார்.
மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷாபாலி வர்மா வழக்கம் போல் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 42 பந்துகளை எதிர்கொண்ட அவர் 11 பவுண்டரி, மூன்று சிக்சர் என 79 ரன்கள் குவித்தார். ஹர்மன்பிரீத் கவுர் 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இந்திய மகளிர் அணி 13.2 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது.
இதன் மூலம் ஐந்து டி20 போட்டி கொண்ட தொடரில் இந்திய மகளிர் அணி 3- 0 என்ற கணக்கில் வெற்றியை பெற்றிருக்கிறது. கடைசி இரண்டு போட்டிகள் சமீபிரதாய ஆட்டமாக தான் நடைபெறும். இதில் நான்காவது டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications