Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 வரலாற்றில் சிறந்த வெற்றி.. சூப்பர் ஓவரில் தெரிந்த முடிவு.. ஆஸி. மகளிரை வீழ்த்தி இந்தியா அபாரம்

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மகளிர் கிரிக்கெட் டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு, ஆஸ்திரேலிய மகளிர் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டது.

முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

55 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட் விற்று தீர்ந்ததால், ஏராளமானோர் மைதானத்திற்கு வெளியே காத்து கொண்டிருந்த நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, தொடக்க வீராங்கனை அலிசா ஹெலி 25 ரன்கள் எடுத்த நிலையில், தீப்தி சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பெத் மூனி 54 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.

187 ரன்கள் குவிப்பு

187 ரன்கள் குவிப்பு

மறுமுனையில் தஹிலா மெக்ராத் 51 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். இதனால் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, செஃபாலி வர்மா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தது.

இந்தியா பதிலடி

இந்தியா பதிலடி

செஃபாலி வர்மா 34 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிகியூஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியை தொடர்ந்த ஸ்மிருதி மந்தனா 49 பந்துகளில் 79 ரன்கள் விளாசி உள்ளார். இதில் 9 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் 21 ரன்களில் வெளியேறினார். கடைசி 2 ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணி 19வது ஓவரில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தது.

சமனில் முடிந்த போட்டி

சமனில் முடிந்த போட்டி

கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய வீராங்கனை வைத்யா 1 பவுண்டரி, பிறகு சிங்கில் என அடித்தார். கடைசி பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது தேவிகா வைத்யா ஒரு பவுண்டரி விளாச, போட்டி சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

இந்த சூப்பர் ஓவரில் ரிச்சா கோஷ் ஒரு பவுண்டரி அடித்து ஆட்டமிழந்த நிலையில், ஸ்மிருதி மந்தனா ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி, கடைசி பந்தில் 3 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ரன்கள் குவித்தது. 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி 16 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய மகளிர் அணி சமன் செய்த நிலையில், டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து 16 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியாவின் பயணத்தை இந்தியா தடுத்து நிறுத்தி அசத்தியது.

Story first published: Sunday, December 11, 2022, 23:18 [IST]
Other articles published on Dec 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+