மும்பை : இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியில் விராட் கோலி கேப்டனாக இருந்தபோது ஒரு முறை கூட நாம் ஐசிசி கோப்பையில் வென்றது கிடையாது. விராட் கோலி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் பல உச்சங்களை தொட்டாலும், சாம்பியன்ஸ் கோப்பை டி20 உலக கோப்பை 50 ஓவர் உலகக் கோப்பை என தொடர்ந்து தோல்வியை தழுவி வந்தது.
இதனை அடுத்து விராட் கோலி அதிரடியாக நீக்கப்பட்டு ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோகித் சர்மா பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பை, 50 ஓவர் உலக கோப்பையில் இறுதி போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி என குறிப்பிடத்தகுந்த வெற்றியை பெற்று இருக்கிறது.

தற்போது இதே போல் ஒரு நிலை தான் இந்திய மகளிர் அணியிலும் ஏற்பட்டு இருக்கிறது. விராட் கோலியை போல் மகளிர் கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் கேப்டனாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். தன்னைத் தவிர வேறு யாரும் கேப்டனாக இருக்கக் கூடாது என்பது போல் அவர் செயல்பட்டு வந்தார். நட்சத்திர வீராங்கனையான மித்தாலி ராஜ் அணியை விட்டு நீக்கியது.
எதிரணி வீராங்கனைகளிடம் அத்துமீறி நடந்து கொள்வது என்று ஹர்மன்பிரீத் செயல்பட்டு இருக்கிறார். 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய மகளிர் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்மன்பிரீத் கவுர், 2017 50 உலகக் கோப்பை மற்றும் 2020 டி20 உலக கோப்பை என இரண்டு தொடரில் இந்திய அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்று சில தவறான முடிவுகள் காரணமாக கோப்பையை கைப்பற்ற முடியாமல் தடுமாறி வருகிறார்.
இதனால் ஹர்மன்பிரீத் கவுரை விராட் கோலி போல் மாற்ற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது 2024 2024 மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறி இருக்கிறது.
இதனால் கேப்டனாக ஹர்மன்பிரீத் சிறப்பாக செயல்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஹர்மன்பிரீத் கவுரை மாற்ற வேண்டும் என முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ் வலியுறுத்தி இருந்தார். இந்த சூழலில் இந்திய மகளிர் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து விவாதிக்க தேர்வு குழு முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது.
வரும் அக்டோபர் 24ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்திய மகளிர் அணிக்கு புதிய கேப்டன் கொண்டுவரப்படலாம் என தெரிகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது அந்த தொடருக்கு முன்பு புதிய கேப்டனை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.